ஐதராபாத்: வங்கதேசம் - இந்தியா அணிகள் இடையிலான 2வது மற்று கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் விராட் கோலியின் தீவிர ரசிகனான 15 வயது சிறுவன் அவரது ஆட்டத்தை காண ஏறத்தாழ 58 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரம் சைக்கிளில் பயணித்து போட்டி நடைபெறும் கான்பூர் மைதானத்திற்கு வந்த சம்பவம் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
58 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்:
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் இருந்து 58 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்த அந்த சிறுவன் ஏறத்தாழ 7 மணி நேர பயணித்திற்கு பின்னர் கான்பூர் மைதானத்தை அடைந்துள்ளார். கார்த்திக் என்ற சிறுவன் காலை 4 மணிக்கு இருள் சூழ்ந்த வேளையில் தன் சைக்கிள் பயணத்தை தொடங்கிய நிலையில் 11 மணி அளவில் கான்பூரை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
10ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அருகில் இருந்தவர்கள் தனியாக பயணம் பெற்றோர்கள் எப்படி அனுமதித்தனர் என்று எழுப்பிய கேள்விக்கு, தன்னை விருப்பம் போல் சென்று விராட் கோலி பார்த்து வர பெற்றோர்கள் அனுமதித்தாக அந்த சிறுவன் கூறுகிறார்.