ETV Bharat / state

சொர்க்கவாசல் திரைப்படத்திற்கு தடை? - வழக்கை எடுக்க நீதிபதிகள் மறுப்பு! - SORGAVAASAL MOVIE ISSUE

சொர்க்கவாசல் படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் ஒவ்வொரு திரைப்படங்களும் மிகவும் சிரமப்பட்டு எடுக்கிறார்கள், உடனடியாக அதை தடை செய்ய வேண்டும் எனக் கேட்பது ஏற்புடையது அல்ல என மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

சொர்க்கவாசல் போஸ்டர், உயர்நீதிமன்ற மதுரை கிளை
சொர்க்கவாசல் போஸ்டர், உயர்நீதிமன்ற மதுரை கிளை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 15 hours ago

மதுரை: சொர்க்கவாசல் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், ஒவ்வொரு திரைப்படங்களும் மிகவும் சிரமப்பட்டு எடுக்கிறார்கள். அதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனக் கேட்பது ஏற்புடையது அல்ல எனவும், தற்போது ஒரு திரைப்படத்தை பிரபலமாக்குவதற்கு இதுபோன்ற சர்ச்சையைக் கிளப்பி படத்தை பார்க்க வைப்பது ஒரு வகை மாடலாக மாறி வருகிறது எனத் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஏற்க மறுத்துவிட்டனர்.

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் (Sorgavaasal) திரைப்படம் நேற்று (டிச.27) நாடு முழுவதும் ஓடிடியில் (OTT) வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வீரபாண்டி கட்டபொம்மன் பின்பற்றக்கூடியவர் அவமதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, சொர்க்கவாசல் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கை அவசரமாக எடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும், வழக்கறிஞர் ஒருவர் நேற்று விடுமுறை கால நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணை செய்யப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் வெளியாகும் திரைப்படத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை எவ்வாறு தடை விதிக்க முடியும். இது மட்டுமல்லாமல் இப்பொழுது இது ஒரு பேஷனாக உள்ளது. ஒரு படத்தை எடுப்பது அதை தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்து படத்தை பிரபலமாக்குவது என இதுபோன்ற செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஒரு திரைப்படம் மிகவும் சிரமப்பட்டு பல பொருளாதாரங்களை செலவிட்டு எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படக்கூடிய திரைப்படங்களை தடை விதிக்க கோரி மனுத் தாக்கல் செய்வதும் ஏற்புடையது அல்ல. வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய வரலாறு மனுதாரருக்கு தெரியுமா? தெரிந்தால்தான் அதில் எது தவறு எது சரி என்பது முடிவுக்கு வர முடியும். அவ்வாறு தெரியாத பட்சத்தில் எவ்வாறு திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கும்பகோணத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட திமுக பேனர்கள் - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ஒரு திரைப்படத்தில் சில கருத்துக்கள் வந்தாலும், அந்த கருத்தை சர்ச்சையாக்குவதால் அதிகமானவர் அதை பார்க்கக் கூடிய சூழலும் ஏற்படுகிறது. திரைப்படத்தை பொழுதுபோக்காக விட்டு விட்டால் அது யாருக்கும் தெரியாமலே போய்விடும். இதுமட்டுமல்லாமல், இந்த நீதிமன்றத்திற்கு நாடு முழுவதும் தடை விதிப்பதற்கு எப்படி அதிகாரம் உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தை அல்லது உச்ச நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது" என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.