மேஷம்:அலுவலகம் மற்றும் குடும்பம் ஆகிய இரண்டிற்கும் இடையே நீங்கள் சிக்கிக் கொண்டிருப்பீர்கள். இரு இடத்திலும் உங்கள் கவனம் தேவைப்படுகிறது. மாலை நேரத்தில், சந்தோஷமாக நேரத்தை கழிக்க ஒதுக்கவும். புகழடைய வேண்டும் என்ற உங்களது ஆசை நிறைவேறும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்: உங்களது பெரும்பாலான நேரத்தை, உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவதில் செலவழிப்பீர்கள். வர்த்தகரீதியான சந்திப்புகள் மூலம், பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆராய்ச்சிப் பணியில் எதிர்பார்த்த அளவிற்கு மேலாக முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்:உங்களது போட்டியாளர்கள், வர்த்தகத்திலும் விற்பனையிலும் உங்களை வீழ்த்த விரும்புவார்கள். அனைத்து பரிவர்த்தனைகளிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு சாதகமாக இருப்பது போல் நடந்து கொள்பவர் மூலம் பாதிப்புகள் ஏற்படலாம். முன்னதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட விஷயத்தில் ஒப்பந்தங்கள் நிறைவு செய்யப்படலாம்.
கடகம்:பணியிடத்தில் நீங்கள், செயல்திறனுடன் பணியாற்றுவீர்கள். அதேநேரத்தில் பலவிதமான சிந்தனைகள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இதனால் சில கவனச்சிதறல் ஏற்பட்டாலும், அதிலிருந்து விலகி பணியில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் மனதிற்கு நெருக்கமானவருடன், நேரத்தை செலவிடுவதற்காக வேலையை விரைந்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.
சிம்மம்: பாராட்டுதல்களைப் பெறத் தயாராக இருங்கள். நீண்ட நாட்களாக கிடைக்காமலிருந்த அங்கீகாரம், உங்கள் கடின உழைப்பின் மூலம் இப்போது கிடைத்துள்ளது. சக பணியாளர்கள் மற்றும் பணியில் மூத்தவர்களின் ஆதரவும் உதவியும் கிடைத்து, புதிய பணிகளை மேற்கொள்வீர்கள்.
கன்னி:குறிக்கோளை நிறைவேற்ற மனதை ஒருமுகப்படுத்திச் செயல்புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும். முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால் உங்களது நிர்வாகத் திறன்கள் மேலும் அதிகரிக்கும்.