மேஷம்: நீங்கள் அனைத்து விஷயங்களிலும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். இன்றைய தினம் முழுவதும் பலவகையான, குடும்பம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இளைஞர்கள் ஷாப்பிங் செல்லுதல் அல்லது திரைப்படத்தைப் பார்த்தால் போன்றவற்றில் நேரம் செலவிடும் வாய்ப்புள்ளது. குழந்தைகள், நீங்கள் பார்ட்டி தரவேண்டும் என்று உங்களை நச்சரிக்கக் கூடும்.
ரிஷபம்: இன்று உங்களுக்கு அழகின் பால் ஈர்க்கப்பட்டு, அதனை ரசிக்கும் உணர்வு அதிகம் இருக்கும். அதனால் சில முக்கியமான உறவுகள் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையை தவிர்க்க, உங்கள் மனதிற்குப் பிடித்தவர்களுடன் அணுகும்போது, அவர்கள் நிலையைப் புரிந்துகொண்டு பழகவும்.
மிதுனம்:எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க சிரமப்படுவதுடன், மன அழுத்தம் ஏற்படக்கூடும். அதனால் மன நிலையிலும் மாற்றம் ஏற்படும். குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் உங்கள் பிரச்சனைகளை கூறுவதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்:உங்கள் கற்பனைத் திறனை அதிகரிக்கக் கூடும். உங்களின் கருத்துக்கள் சிறந்து விளங்கும். உங்களின் கௌரவம் அதிகரிப்பதுடன், உங்கள் முயற்சிக்கு பாராட்டு கிடைக்கப் பெறலாம். படைப்பாற்றல் அதிகரிக்கும் மற்றும் காரிய சித்தி அடைய ஏற்ற நாளாக இன்று அமையலாம்.
சிம்மம்:இன்று ஒரு சவாலான நாளாக இருக்கலாம். நீங்கள் பதட்டங்களும், சிக்கல்களையும் எதிர்கொண்டாலும் அனைத்துப் பணிகளிலும் வெற்றியடைய சாத்தியக்கூறுகள் நிறைந்து காணப்படுகிறது. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். அலுவலகப் பணிக்கும், வீட்டிற்கும் இடையே சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
கன்னி:குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அவர்கள் படிப்பிலும், மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். உங்கள் திறமைகள் மேம்படும். வாழ்க்கையில் எது நடந்தாலும், அமைதியாக அதை ஏற்றுக் கொண்டால் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.