மேஷம்: இன்று நீங்கள் உற்சாகம் இருக்கும் நாள். முடிந்த வரை உங்களை நீங்களே உற்சாகமாக்கி கொள்ளுங்கள். ஏதேனும் புதிய இடங்களுக்குச் செல்ல தயாராக இருக்கங்கள். மனதால் விரும்பி ஒரு செயலில் இறங்குங்கள். இன்று உங்களை தேடி மிக அதிகமான அளவு வேலை வரக் கூடும். குழுவாக ஒரு செயலில் ஈடுபட்டு, வெற்றி பெறுவீர்கள். இன்று அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் ஆளாக நீங்கள் இருப்பீர்கள்.
ரிஷபம்: உங்களது கவனம் இன்று உங்களது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது இருக்கும். அவர்களுடனான உங்கள் ஆத்மார்த்தமான உறவு மூலம் மனம் நிம்மதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும். இன்று முழுவதும் உங்கள் அன்புக்குரியவரின் எண்ணங்களே உங்கள் மனதில் நிறைந்திருக்கும். அதை ஒரு ஓரமாக வைத்து விட்டு பிற செயல்களில் ஈடுபடுங்கள்.
மிதுனம்: உயர் அதிகாரிகள் உங்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்குவார்கள். பகல் நேரத்தில் வேலை அதிகம் இருந்தாலும், மாலையில் உங்களது திறமையான பணியால், கிடைத்த வெற்றியை கொண்டாடும் வாய்ப்பு உள்ளது. ஏலம் தொடர்பான விஷயங்களில் தற்போது முடிவெடுக்காமல் சிறிது ஒத்திப் போடுவது நல்லது.
கடகம்: இன்றைய தினத்தில் நீங்கள் வேடிக்கையான மனநிலையில் இருப்பீர்கள். வேடிக்கை, வம்பு பேச்சுக்கள், சிரிப்பு மற்றும் குதூகலம் நிறைந்து நாளாக இருக்கும். இன்று மிகுந்த மகிழ்ச்சியாகரமான நாள். நாளின் பிற்பகுதியில் உங்கள் வழக்கமான அமைதியான நிலைக்கு திரும்பி, பணியில் கவனம் செலுத்துவீர்கள்.
சிம்மம்: அலுவலகத்தில் பதவி உயர்வை நோக்கி இருக்கும் உங்களது செயல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் கூடுதல் வேலைகளை செய்ய வேண்டி ஆகிவிடும். நீங்கள் செய்யும் அனைத்து வேலைக்கும் பயன் கிடைக்கும் நாளாக இருக்கும். இன்று இல்லையென்றாலும், வருங்காலத்தில் இதற்கான பலன்களை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். மனவாழ்க்கையில் கூறும் அளவிற்கு மகிழ்ச்சிகரமாக எதுவும் நடைபெறாது.
கன்னி: ஒரு செயலில் உறுதியாக இறங்கி வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உருவாகும் நாள் இன்று. கடும் உழைப்பிற்குப் பிறகு புத்துணர்ச்சிக்காக தனிப்பட்ட விருந்து, சமூக நிகழ்ச்சிகள் அல்லது திருமண விருந்து ஆகியவற்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
துலாம்: யார் என்ன கூறினாலும் அவை அனைத்தையும் இன்று நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். எதை பற்றியும் இன்று குறைக் கூற மாட்டீர்கள். உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்களது செயல் மூலம் உங்களது கருத்துக்களை எடுத்துக் கூறுவீர்கள்.
விருச்சிகம்: உங்கள் மனதில் இருக்கும் கருத்தை, எண்ணத்தை உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். அன்புக்குரியவர்கள் குறித்து கவலை கொள்ள நேரிடலாம். ஆனால், உங்கள் மனதில் உள்ள கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது.
தனுசு: உயர் அதிகாரிகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து பல கூடுதல் பொறுப்புகளை வழங்குவார்கள். நீங்களும் அதற்காக கடுமையாக உழைத்து, உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். உங்களது உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். ஊக்கத்தொகை கிடைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் அதற்கு தகுதியானவர் தான்.
மகரம்: நேர்மறையான அணுகுமுறையுடன் இன்றைய தினத்தை தொடங்குங்கள். உங்களது அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான மனப்பான்மை, மற்றவர்களிடமிருந்து உங்களை உயர்வாக காட்டுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் வாழ்க்கைத் துணையுடன், சச்சரவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால், இன்று அந்த மனக்கசப்பு நீங்கும் வாய்ப்பு உள்ளது. மணவாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும்.
கும்பம்: நிதி நிலைமை மற்றும் வருமானம் தொடர்பான கவலைகள் நிறைந்த நாளாக இன்று இருக்கும். மாலையில் நீங்கள் நண்பர்களுடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் நண்பர்களின் முக்கியத்துவத்தை உணரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மீனம்: உங்களது மனதில் உள்ளவற்றை, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். உங்களது திறமையை பார்த்து அறிவார்ந்த மக்கள் ஈர்க்கப்படுவார்கள். சிறந்த கல்வியாளர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இந்த வாய்ப்பு உங்களது பணியில் நீங்கள் உயர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.