தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: பணியிடத்தில் அங்கீகாரமும், பாராட்டுகளும் காத்திருக்கு! - TODAY RASIPALAN IN TAMIL

மார்கழி 10, டிசம்பர் 25ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2024, 6:41 AM IST

மேஷம்: மனதிற்குப் பிடித்தவர்களை மகிழ்ச்சிப்படுத்த, அவர்கள் மனதைக்கவர புதுமையான முயற்சி மேற்கொள்வீர்கள். நன்மைகள் மற்றும் உறவினர்கள் தொடர்பாக அதிருப்தி இருக்கக்கூடும். எனினும் புதிய நண்பர்களுடன் மாலையில் விருந்துக்கு செல்வீர்கள்.

ரிஷபம்: இன்று உணர்வுரீதியாகப் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் உணர்ச்சிப் போராட்டம் காரணமாக பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் சந்திப்பின்போது, மற்றவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக குழப்பமான நிலை நிலவக் கூடும். சச்சரவுகள் அல்லது விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மிதுனம்:மனதுக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உதவி கோரும் மக்களுக்கு நீங்கள் உதவ முன் வருவீர்கள். அதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களது தாராள மனப்பான்மை காரணமாக, உங்கள் சமூக அந்தஸ்து உயர்ந்து அனைவரது நம்பிக்கையும் பெறுவீர்கள்.

கடகம்:விரும்பத்தகாத நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளை சந்திக்கக்கூடும். அதனால் நீங்கள் மனக்கவலை அடைவீர்கள். உங்கள் செயல் திறனின் மூலமாக அனைத்தையும் வெற்றி கொள்வீர்கள். படிப்பில் கவனம் செலுத்தவும். வெற்றி என்பது 99 சதவீத முயற்சி மற்றும் ஒரு சதவிகிதம் தான் விதி என்பதை நினைவில் கொள்ளவும்.

சிம்மம்:பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்கவும், புதிய தொடர்புகளை உருவாக்கவும், இன்று சிறந்த நாள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தரக் கூடும். வீட்டில் சிரிப்பு மழை பொழியும். விருந்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு சிறந்த வகையில் விருந்து அளிப்பீர்கள்.

கன்னி:உறவுகள் மற்றும் தொடர்புகள் மீது உணர்வுகள் ஆதிக்கம் செலுத்தும். உணர்ச்சி ரீதியான பாதிப்பின் காரணமாக நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். எனினும் மற்றவர்கள் கூறும் விஷயத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், உள்ளார்ந்த உணர்வுகளை மதித்து நடந்து கொள்வீர்கள்.

துலாம்:இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பீர்கள். அது பணியில் உள்ள உங்களது ஈடுபாடு அல்லது குடும்பத்தின் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். வர்த்தகத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றி, நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்:அன்பு செலுத்துபவர்களுக்காக அதிக அளவில் பணம் செலவழிப்பீர்கள். நமக்கு நெருக்கமானவர்களுக்கு செலவழிக்கும் போது, பணத்தைப் பற்றி நினைக்கக் கூடாது அல்லவா? அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அல்லது பிற இடங்களுக்கு கூட்டிச் செல்லக்கூடும்.

தனுசு:பிரச்சினைகள் அல்லாத குழந்தைப் பருவத்திற்கு செல்ல விரும்புவீர்கள். திட்டமிடப்படாத சுற்றுலாப் பயணம் போன்றவற்றை மேற்கொள்ள நீங்கள் விரும்பலாம். பழைய நண்பர்களை சந்திப்பதன் மூலம், மலரும் நினைவுகளால் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

மகரம்:பணியிடத்தில் அங்கீகாரமும், பாராட்டுகளும் காத்திருக்கின்றன. சக பணியாளர்கள் உங்கள் வெற்றியைப் பார்த்து பொறாமைப்படாமல், அவர்கள் உங்களுக்கு ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால் புதிய பணிகளில் வரும் சோதனைகளை திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.

கும்பம்:வலியைக் கொடுக்கும் உங்கள் கடவுள், சுகத்தையும் வழங்குவார்கள். இன்றைய நாளின் தொடக்கத்தில், செய்யவேண்டிய பணி அதிகம் இருந்தாலும், இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகச் செய்து முடித்து விடுவீர்கள்.

மீனம்:தினசரி பணியை ஒழுங்குபடுத்த, அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்வீர்கள். ஆனால் கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தினால், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையாமல் இருக்கும். எனவே பொறுமையைக் கடைப்பிடித்து, உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால் நிலைமை தானாகவே சரியாகும்.

ABOUT THE AUTHOR

...view details