ETV Bharat / spiritual

இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.. எந்த ராசிக்குத் தெரியுமா? - TODAY RASIPALAN IN TAMIL

ஜனவரி 13ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2025, 6:36 AM IST

மேஷம்: இன்று உங்களுக்கு வெற்றி ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நீங்கள் தொலைநோக்கு கொண்ட வேடிக்கையான மனிதர். உங்கள் குறிக்கோளை நிறைவேற்ற, வேலை அதிகம் இருக்காமல் பார்த்துக் கொள்ளவும். நீங்கள் நேர்மறை எண்ணத்துடன் உண்மையாக உழைக்கும் நபர். கடவுள் மீது நம்பிக்கை வைக்கவும்.

ரிஷபம்: இன்று நல்ல முறையில் உங்களுக்கான நேரத்தை செலவழிப்பீர்கள். மற்ற நாட்களைப் போல் அல்லாமல், இன்று நீங்கள் அமைதியாக இருந்து புத்துணர்வைப் பெறவும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் விருந்து அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கொள்வீர்கள். ஏதேனும் ஒரு, வித்தியாசமான சுவை கொண்ட, உணவை ருசித்து பார்க்கும் ஆர்வம் இருக்கும்.

மிதுனம்: இன்று, சில காரணங்களால் உங்கள் மனதில் வருத்தமும், பதற்றமும் ஏற்படும். உங்கள் கவலைகளை நீங்கள் வெளிப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், காதல் துணையின் அன்பைப் பெறுவீர்கள். பழைய விஷயங்களை மறந்து, நம்பிக்கையுடன் முன்னேற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கடகம்: இன்று புதிய வகை உணவு வகைகளை தயாரிப்பீர்கள். அதனை குடும்ப உறுப்பினர்கள், மிகவும் விரும்பி சாப்பிட்டு மகிழ்வார்கள். பழைய நினைவுகளில் நீங்கள் மூழ்கக் கூடும். விருந்தினரின் வருகையால், சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

சிம்மம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நீங்கள் மற்றவர்களிடம் கருத்தை கேட்டு அறிவீர்கள். அப்போது நீங்கள், ஒன்றும் பேசாமல் பொறுமையாக அடுத்தவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் என்பதால், முக்கியமான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

கன்னி: இன்று, உங்களுக்கு ஊக்கம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களது கற்பனைத் திறன் காரணமாக, நீங்கள் சிறந்த கலைஞராக வெளிப்படுவீர்கள். கற்பனை திறன் காரணமாக வார்த்தைகள் சரளமாகத் தடையில்லாமல் வரும். ஆடல் பாடலில் பங்கு கொண்டால், அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள். கலைகள் அல்லது எழுதுவதை பொழுதுபோக்காகக் கொண்டால் உங்களுக்கு நல்லது.

துலாம்: உங்கள் மனதில் ஒளிந்திருக்கும் கலைஞர் இன்று வெளிப்படுவார். உங்கள் கற்பனைத் திறன்களை வெளிக்காட்டுவீர்கள். நீங்கள் ஆர்வமாக உள்ள விஷயங்களில் கவனம் செலுத்தி, மேம்படுவீர்கள். இன்று உங்களுக்கு ஆதாயமாக உள்ள சட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்புள்ளது. பொதுவாக இன்றைய தினம் ஒரு நல்ல வெற்றிகரமான நாளாக இருக்கும்.

விருச்சிகம்: இன்று, மிகச் சரியாக வேலை பார்க்கும் திறன் உடையவர் என்று போற்றப்படுவீர்கள். பணியில், குறிப்பிட்ட நெறிமுறைகளை மிகச்சரியாக பின்பற்றி, நேரம் தவறாமல் நடந்து கொள்வீர்கள். சுற்றியிருப்பவர்களுக்கு, ஒரு உதாரணமாக திகழ்வீர்கள்.

தனுசு: இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாகும். நீங்கள் உங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளது. அவர்களிடம் நீங்கள் காதல் வயப்படுவீர்கள். எனினும் இது கவர்ச்சியின் காரணமாக வந்த ஈர்ப்பாக இருக்கலாம். தொடக்கக் கால உறவை, கவனத்துடன் கையாளாமல் இருந்தால் உறவில் பாதிப்பு ஏற்படலாம். எனவே, உங்களது புகழைப் பாதிக்காத வண்ணம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

மகரம்: நீங்கள் தேனீயைப் போல் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலை மிக அதிகமாக இருக்கும் காரணத்தினால், உங்களைப் பற்றி நினைக்க உங்களுக்கு நேரம் இருக்காது. நீங்கள் கற்பனைத் திறனுடன் இருக்க ஆசைப்படுவீர்கள். ஆனால் வேலை அதிகமிருப்பதால், அதற்கான சுதந்திரம் இருக்காது. நேர நிர்வாகம் பற்றி நீங்கள் அறிந்து கொண்டு, முன்னுரிமை தர வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டுச் செயல்படுவதால், வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.

கும்பம்: இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். சிறியது முதல் பெரியது வரை உங்களது அனைத்து திட்டங்களும், நடைமுறைக்கு வரும். உங்கள் பாதையில் தடைகள் ஏதும் இருந்தால் மனம் தளர வேண்டாம். சோதனைகள் அனைத்தையும் கடந்து, நீங்கள் வெற்றியாளராக இருப்பீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

மீனம்: கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தினால், புதிய திட்டங்கள் எதையும் இன்று தொடங்குவது நல்லது அல்ல. நீங்கள் எடுத்துக் கொள்ளும் எந்த ஒரு கட்டத்திலும், பாதகமான பலன்கள் ஏற்படும். வர்த்தகத்தில் இருப்பவர்கள், ஒப்பந்தங்களை ஏற்படுத்தும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடவுளின் ஆசியால், உங்களது வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.