உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். தேய்வீகக் காட்சி அளிக்கும் மதுரை மீனாட்சி. மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. மேள தாளங்கள் முழங்க நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாள் நிகழ்வு. தேய்வீகக் காட்சி அளிக்கும் மதுரை சுந்தரேஸ்வரர். மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருக்கல்யாண மேடையில் மீனாட்சியம்மனின் வலது புறம் பவளகனிவாய் பெருமாளும். சுந்தரேசுவரரின் இடது புறம் சுப்ரமணியசுவாமி தெய்வானையுடனும் எழுந்தருளினர். வேதமந்திரங்கள் முழங்க. மங்கல வாத்தியங்கள் வாசிக்க வெகுவிமர்சையாக மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன மங்கல நாண் அணிவிக்கப்பட்டுதிருக்கல்யாணம் நடைபெற்றது