தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு பிரமாண்ட காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது.. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணமலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டுள்ளன.. பவளப்பாறைகள். நண்டு. சிற்பி. ஆக்டோபஸ். நட்சத்திர மீன். கடல் குதிரை போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.. கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டோரா. புஜ்ஜி ஆகியவை மரம் நடுவது போன்று காட்சிபடுத்தப்பட்டுள்ளது. கோடைவிழா நடைபெறும் 5 நாட்களும் குழந்தைகள். சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. மேரி கோல்டு. டேலியா. வெர்பினா. பிளாக்ஸ் உள்ளிட்ட மலர் வகைகளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. மலர்களைக் கொண்டு நடைபெறும் பிரமாண்ட மலர்க் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு மட்டுமல்ல .மனதுக்கும் விருந்தளிக்கிறது.. இவ்விழாவில் ஓவியங்கள் உள்ளிட்ட அரிய புகைப்படக் கண்காட்சி. கலை நிகழ்ச்சிகள். இன்னிசை நிகழ்ச்சிகள். செல்லப்பிராணிகள் கண்காட்சி. படகுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும். இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.. வண்ண மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்ட மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்து அவற்றுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஏற்காட்டின் முக்கிய இடங்கள் குறித்த விவரம் QR code-ல் உள்ளடக்கி அச்சிடப்பட்டு .அவற்றினை ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியில் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில். கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டொனால்டு டக். மிக்கிமௌஸ். டாம் அண்ட் ஜெரி மரங்களை நடுவது போலவும். நீர் பாய்ச்சுதல் போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.