ஐதராபாத் :இந்தியா மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புக்கு (EFTA) இடையே கடந்த மார்ச் 10ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த வர்த்தக உடன்படிக்கையின் மூலம் இந்தியா - ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே சமமான வர்த்தகம் மற்றும் இளைஞர்களுக்கு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு வழிவகை செய்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் உலகின் 11வது பெரிய பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து தற்போது 5வது பெரிய பொருளாதாரமாக முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வணிகம், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் புதிய உயரத்தை தொடும் வகையில் பரந்த அளவிலான சீர்திருத்தங்களையும், எளிதாக வணிகம் செய்வதையும் நாடு மேற்கொண்டு வருகிறது.
EFTA என்பது ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பாகும். ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்யும் இந்த கூட்டமைப்பில் ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதேநேரம் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு EFTA என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கம் கிடையாது.
இந்த ஐரோப்பிய சுதந்திர கூட்டமைப்பு EFTA, கனடா, சிலி, சீனா, மெக்சிகோ மற்றும் தென் கொரியா தற்போது இந்தியா உள்ளிட்ட 40 நாடுகளுடன் 29 ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு உள்ளது. இதில் இந்தியாவுடனான ஐரோப்பிய சுதந்திர வர்த்த கூட்டமைப்பிம உறவு என்பது கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது.
கடந்த 2008ஆம் ஆண்டு EFTA உடன் இந்தியாவின் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி டெல்லியில் நடந்த கூட்டத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த EFTA நாடுகளுக்கு கடந்த 2022 -23 நிதி ஆண்டில் இந்தியா 1 புள்ளி 92 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகளை மேற்கொண்டு உள்ளது.
அதே காலக்கட்டத்தில் 16 புள்ளி 74 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி ஆனது நடைபெற்று உள்ளது. EFTA நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தகப் பற்றாக்குறையை கொண்டுள்ளது. அது 2021 - 2022 நிதி ஆண்டில் 23 புள்ளி 7 பில்லியன் டாலராக அதிகரித்தும், 2022 -23 நிதி ஆண்டில் 14 புள்ளி 8 பில்லியன் டாலராக குறைந்தும் காணப்படுகிறது.
இந்தியா - ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு இடையிலான இரு வழி வர்த்தக போக்குவரத்து கடந்த 2022 - 2023 நிதி ஆண்டில் 18 புள்ளி 65 பில்லியன் டாலராக உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் ஒப்பிட்டு கூறும்போது 2021- 2022 நிதி ஆண்டில் அது 27 புள்ளி 23 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் கூட்டளி நாடுகளுக்கு பல வகையான கெமிக்கல்கள், பாதி பதப்படுத்தப்பட்ட ரத்தின கற்கள், படகு மற்றும் கப்பல்கள், மருந்து மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை இந்தியா ஏற்றுமதி செய்து உள்ளது. அதேநேரம் இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகளை கடந்த 2000 ஏப்ரல் மற்றும் 2023 டிசம்பரில் சுவிட்சர்லாந்திடம் இருந்து பெற்று உள்ளது. சுவிட்சர்லாந்து இந்தியாவின் 12வது பெரிய முதலீட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் நார்வேயிடம் இருந்து 721 புள்ளி 52 மில்லியன் அமெரிக்க டாலர், ஐஸ்லாந்திடம் இருந்து 29 புள்ளி 26 மில்லியன் அமெரிக்க டாலர், லிச்சென்ஸ்டீனிடம் இருந்து 105 புள்ளி 22 மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய நேரடி அந்நிய முதலீடாக பெற்று உள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பின் பங்கு என்பது 0.4 சதவீதமாகவும், இறக்குமதி 2 புள்ளி 4 சதவீதமாகவும் உள்ளது. இதில் வரி நீக்கம் என்பது இந்தியாவின் வர்த்தக பற்றக்குறைக்கு வழிவகுப்பதை காண முடிகிறது. இந்த ஒப்பந்தமானது இந்தியாவில் இருந்து ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு நாடுகளுக்கு கால்நடை பொருட்களான மீன், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காய்கறி எண்ணெய் உள்ளிட்ட இதர பொருட்களை வரி விலக்குடன் ஏற்றுமதி செய்வதையே நோக்கமாக கொண்டு இருந்தது.
இந்த வர்த்தக ஒப்பந்த அம்சங்களுடன், உயர் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடுகளை இந்தியா எதிர்பார்த்தது. தற்போதைய ஒப்பந்தத்தில் சரக்கு மற்றும் சேவை வர்த்தக ஒப்பந்தம், அறிவுசார் சொத்துரிமைகள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒத்துழைப்பு, அரசு கொள்முதல், வர்த்தகம் மற்றும் வர்த்தக வசதிக்கான தொழில்நுட்ப தடைகள் உள்பட 14 அத்தியாயங்கள் கொண்டு உள்ளன.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை இந்தியாவில் முதலீடு செய்து 1 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டு உள்ளது. இந்தியா - ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு இடையிலான வர்த்தக ஒப்பந்தம், வர்த்தகம் மற்றும் முதலீட்டை சார்ந்தது மட்டுமில்லாமல் உலகின் சிறந்த தொழில்நுட்ப மூலதன நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவு, ஒத்துழைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை பேணுவதற்கான வாய்புகளையும் உருவாக்கி உள்ளது.
ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பில் நார்வேக்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்து தான் இந்தியா பெரிய வர்த்தக கூட்டாளி நாடாக காணப்படுகிறது. உலகின் மூன்றில் ஒரு பங்கு புதுப்புது வர்த்தக யோசனைகள் மற்றும் புதிய தொழில்முனைவோருக்கான பொருளாதாரத்தை கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து காணப்படுகிறது.
புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கான உலகின் குறியிட்டில் சுவிட்சர்லாந்து முதலிடம் வகிக்கிறது. கடைசி நிதி ஆண்டில் இந்தியா - சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிடையேயான இரு தரப்பு வர்த்தகம் என்பது 17 புள்ளி 14 பில்லியன் அமெரிக்க டாலராகும். இதில் ஏற்றுமதி 1 புள்ளி 34 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் இறக்குமதி 15 புள்ளி 79 பில்லியன் டாலராகும்.
கடந்த 2022- 2023 நிதி ஆண்டில் சுவிட்சர்லாந்துடான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 14 புள்ளி 45 பில்லியன் டாலராகும். சுவிட்சர்லாந்திடம் இருந்து 12 புள்ளி 6 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம், 409 மில்லியன் டாலர் மதிப்பிலான இயந்திரங்கள், 309 மில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகள், 380 மில்லியன் டாலர் மதிப்பிலான கோகிங் மற்றும் ஸ்டீம் நிலக்கரி, 296 மில்லியன் டாலர் மதிப்பிலான எழும்பியல் மற்றும் ஒளியியல் தொடர்பான உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை இந்தியா இறக்குமதி செய்து உள்ளது.