புதுடெல்லி: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மௌலவி அமீர் கான் முத்தகி ஆகிய இருவரும் துபாயில் சந்தித்துப் பேசினர். இவர்களின் இந்த சந்திப்பானது தெற்கு ஆசியாவின் மாறிவரும் காட்சியை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு கவிழ்ந்ததில் இருந்து இந்த பிராந்தியத்தில் மாற்றம் தொடங்கி விட்டது. அப்போது முதல் இந்தியாவிடம் அரிசி வழங்கும்படி வஙகதேசம் கோரிக்கை விடுத்ததுடன் தொடர்ந்து தமது நாட்டுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டபோதிலும் பாகிஸ்தானை நோக்கி அது நெருங்கி வருகிறது.
இந்தியா நம்பிக்கை: ஆயுதங்கள், தானியங்களை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்கிறது. அதே போல வரும் வாரங்களில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் வங்கதேசம் செல்ல உள்ளார். இவையெல்லாம் இந்த பிராந்தியத்தின் காட்சி மாறி வருவதை உணர்த்துகின்றன. வங்கதேசம் என்பது பாகிஸ்தானின் தொலைந்து போன ஒரு சகோதரர் என்று இஷாக் தார் குறிப்பிட்டுள்ளார். வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனூஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் தொடர்ச்சியாக பல சந்திப்புகளை மேற்கொண்டு இருவரும் உறவுகளை மீண்டும் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
சார்க் நாடுகள் கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என யூனூஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இது இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. யூனூஸின் இந்த கோரிக்கையை இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அதே நேரத்தில் வங்கதேசத்துடனான இருதரப்பு உறவுகளை புதுப்பிப்பதற்கான நம்பிக்கையில் இந்தியா உள்ளது.
இன்னொரு புறம் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே ராணுவ ரீதியான ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாடாக வங்கதேசம், பாகிஸ்தானிடம் இருந்து அப்தாலி குறுகிய தூர இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், துருக்கியிடம் இருந்து ஆயுத டேங்க்குகள் கொள்முதல் குறித்து ஆலோசனை வங்கதேசம் மேற்கொண்டு வருகிறது.
வங்கதேசத்துக்கு பயிற்சி: கூடுதலாக இந்த ஆண்டு பிப்ரவரி முதல் பாகிஸ்தான் ராணுவம் வங்கதேச படைகளுக்கு பயிற்சி கொடுக்க உள்ளது. வங்கதேசத்தின் 4 கண்டோண்மென்ட்களில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் பாகிஸ்தான் குழு வங்கதேசத்துக்கு பயிற்சி அளிக்கிறது.
பாகிஸ்தான் ராணுவம் வங்கதேசத்துக்கு பயிற்சி அளிப்பது இந்தியாவுக்கு முக்கியமான கவலையாக இல்லை. ஆனால், பாகிஸ்தான் தரப்பில் தீவிரவாதத் தன்மையை ஊக்குவிக்கும் என்பது தான் இந்தியாவின் கவலையாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான கொள்கையை திணிப்பதாக இருக்கும். இந்தியா-வங்கதேச ராணுவ உறவில் விரும்பத்தகாத உறவுகளை ஏற்படுத்தக் கூடும். இந்தியாவிடம் வங்கதேசத்துக்கு வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை. வங்கதேசத்துக்குள் பாகிஸ்தான் நுழைந்து விட்டால், சீனா அதனைத் தொடந்து செல்லும். இது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், முன்பு மேற்கொள்ளப்பட்டது போல இந்தியாவுக்கு எதிரான குழுக்களுக்கு பயிற்சி அளிக்கும் களமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு பயன்படுத்துவதற்கான கதவுகளை திறப்பதாக இருக்கக் கூடும். இந்தியாவுக்குள் காஷ்மீர் தீவிரவாதிகள் நுழைவதற்கான வழியை வங்கதேசம் அமைத்துக் கொடுப்பதாக இருக்கும். இது ஏற்கனவே தொடங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இடையேயான சந்திப்பு என்பது, வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு எதிரான எதிர்வினையை தூண்டி விட்டால் என்ன நடக்கும் என்பதை இஸ்லாமாபாத்துக்கு எச்சரிக்கையை கடத்துவதற்கான ஒரு சந்திப்பாகும். ஆப்கானிஸ்தானில் நேட்டோ நாடுகள், அமெரிக்காவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் தாலிபான்களை ஆதரித்தபோதிலும், இப்போதைய நிலையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இருநாடுகளுக்கும் இடையே நல்ல சூழல் இல்லை.
ஆப்கானிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் தேரீக்-இ-தாலிபான், பாலோஜ் சுதந்திர படையினரின் தாக்குதல் அதிகரிப்பு, ஆகியவை பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒருவித அழுத்தத்தின் காரணமாக தேரீக்-இ-தாலிபானின் மறைவிடம் என கருதப்படும் இடத்தை நோக்கி பாகிஸ்தான் வான்வெளி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய அகதிகள் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டனர். இது காபூலில் இருந்து பதிலடி தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் இருந்தது.
இந்தியா கண்டனம்: இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த வான்வெளி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் தாக்குதலில் இருந்து தஙகள் மக்களை பாதுகாக்கவே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக பாகிஸ்தான் கூறியது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் ஏதும் அறியாக அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலையும் சந்தேகத்துக்கு இடமின்றி நாங்கள் கண்டனம் தெரிவிப்போம். உள்நாட்டின் தோல்வியை மறைக்க அண்டை நாடுகள் மீது பழிபோடுவது பாகிஸ்தானின் பழைய நடைமுறை என்று கூறப்பட்டது. இந்தியா மட்டுமே இதனை செய்தது.
இந்த ஆதரவு நிலைப்பாடு என்பது, துபாய் சந்திப்புக்கு முந்தைய முக்கியமான நிலைப்பாடாகும். பாகிஸ்தான் உடனான போராட்டத்தில் ஆப்கானிஸ்தான் பக்கம் இந்தியா இருக்கும் என்பதை இது வெளிப்படுத்தியது. உதவி மற்றும் ஆதரவு என்ற மரியாதையுடன் இருந்தது. முரண்பாடாக, ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மை வெறுப்பு மனப்பான்மை என்பது பாகிஸ்தான், அதன் ஆதரவு பெற்ற ஐஎஸ்ஐஎஸ் ஆகியவற்றின் மீது இருந்தது. இந்தியாவை பொறுத்தவரை , அதன் அண்மைய செயல்பாடுகள் இந்த நல்லிணக்கத்தை கட்டமைப்பதாக இருந்தது.
துபாயில் நடந்த சந்திப்பில், மனிதநேய உதவி, வளர்ச்சி திட்டங்கள், கராச்சியை உபயோகிப்பதை தடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு பதிலாக சபாஹர் துறைமுகத்தை உபயோகிப்பது, பொருளாதார அழுத்தங்களின் பகுதியாக சுகாதார ஆதரவு, பரஸ்பரம் கிரிக்கெட் ஒத்துழைப்பு ஆகியவற்றை கொண்டிருந்தது. சர்வதேச அளவில் சவாலான சூழல்கள் நிலவியபோதிலும், ஆப்கானிஸ்தானுடன் ஈடுபாட்டை கடமையாக கொண்டிருப்பதற்கும், இந்தியாவின் தொடர் ஆதரவுக்கும் ஆப்கானிஸ்தான் தரப்பில் நல்லெண்ணம் வெளிப்படுத்தப்பட்டது.
இந்தியாவுக்கு வாய்ப்பு: இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தில் உதவி நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கான அடிப்படை பணியாளர்கள் மட்டும் உள்ளனர். தாலிபான் ஆட்சியை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்திய நடவடிக்கைக்கு பாகிஸ்தான் விமர்சனம் செய்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தூதரகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் இருந்து அதன் மண்ணில் இருந்து இந்தியா அதிகரித்த தாக்குதல்களை நடத்துவதற்கு தூண்டக்கூடும்.
ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் தூதர் மன்சூர் அகமது கான், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் உறவில் எப்போதெல்லாம் வித்தியாசங்களும் பதற்றங்களும் தோன்றுகின்றதோ, ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையேயான சகோதரத்துவத்துடன் கூடிய அண்டை நாடுகள் என்ற உறவை தடுப்பதிலும், இடைவெளியை அதிகரிப்பதையும் இந்தியா ஒரு வாய்ப்பாக கருதும். பரஸ்பரம் கவலைகளுக்கு தீர்வு காண ஆப்கானிஸ்தானுடன் ஈடுபாடு காட்டுவதை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி முன்னெடுப்பது மட்டுமே ஒரே வழி என அவர் கூறியுள்ளார்.
இன்றைய தேதி வரை அமெரிக்கா மறைமுகமாக ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவி அளிக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் அறிக்கையில் தலைவர் மைக்கேல் மெக்கால் கூறியதாக, அதிபர் பைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் படைகளை விலக்கிக் கொண்டதன் பிறகு, தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசை கைப்பற்றியதால் நேரிட்ட சிக்கல்களைத் தொடர்ந்து மனிதநேய உதவிகளுக்காக அமெரிக்கா 2.8 பில்லியன் டாலர் உதவி வழங்கியது என கூறப்பட்டுள்ளது.
தாலிபான் மறுப்பு: மேலும் அந்த அறிக்கையில், தாலிபான்கள் நலனுக்கான எந்த ஒரு அமெரிக்க நிதியும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தாலிபான்களுக்கு அமெரிக்காவின் வரி செலுத்தும் மக்களின் பணம் செல்வதை தடுக்க பைடன் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
தாலிபான்கள் தரப்பில், அமெரிக்காவில் இருந்து எந்த உதவியும் பெறவில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், உண்மையில், அமெரிக்கா ஒரு பைசா கூட இஸ்லாமிய எமிரேட்டுக்கு கொடுக்கவில்லை. ஆப்கானிஸ்தான் மக்களுடைய லட்சகணக்கான டாலர் தொகையை அமெரிக்கா நிறுத்தி வைத்தும், பறிமுதல் செய்தும் உள்ளது. அமெரிக்காவுக்குள், ஆப்கானிஸ்தானுக்கு இதுபோன்ற உதவி அளிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். இந்த உதவியானது, ஆப்கானிஸ்தானில் இதர தீவிரவாத குழுக்கள் வளர்வதற்கு உதவியாக இருக்கும் என்று அமெரிக்காவில் பலர் நம்புகின்றனர்.
இது உண்மையோ அல்லது இல்லையோ எந்த குறிப்பிட்ட எண்ணிக்கையாக இருந்தாலும் இப்போது இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பது என்பதை முன்னெடுத்திருக்கிறது. அமெரிக்காவின் எதிரானதாக உதவி செய்வது என்பது இந்தியாவின் நோக்கம் அல்ல. இது பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
பாகிஸ்தான், வங்கதேசத்தை இந்தியாவுக்கு எதிராக ஆதாயம் பெற பயன்படுத்தினால், இஸ்லாமாபாத்துக்கு எதிராக பலோஜ், டிடிபி ஆகிய அமைப்புகளை ஆதாயமாக காபூல் பயன்படுத்துவதை நோக்கி தள்ளும்போது இதன் மூலம் பாகிஸ்தானுக்கான விஷயங்களை இந்தியா கடினமாக்கக்கூடும். இந்தியா இன்னும் வங்கதேசத்தை கையாள முடிந்தால், தொடர்ந்து ஈடுபாடு காட்டினால், அதன் புவியியல் ரீதியான நெருக்கமாக கருதப்படும்.அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அதிகரிக்கும் அழுத்தங்களை பாகிஸ்தான் எதிர்கொள்ளக்கூடும்.