ஐதராபாத்:சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்திய தொழில்துறையின் முக்கிய அங்கங்களாகும். நாட்டின் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துதல், பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குதல் போன்ற சமூக நோக்கங்களை பூர்த்தி செய்வதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்த சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இருப்பினும், இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிதி உதவி, வணிக நிபுணத்துவம் இல்லாமை மற்றும் தொழில்நுட்ப குளறுபடிகள் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றன. மேலும், தாராளமயமாக்கல், தேவையற்ற உற்பத்தி யுக்திகள் மற்றும் நிலையற்ற சந்தை சூழ்நிலைகள் காரணமாக இந்திய சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் தங்கள் சக நிறுவனங்களிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பு மற்றும் 111 மில்லியன் திறன் மற்றும் அரை திறன் கொண்ட ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை இந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. மேலும் தற்போதை பொருளாதார சூழலில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ரூ.37 டிரில்லியன் கடன் தேவை மற்றும் தற்போதை சந்தை நிலவரப்படி ரூ.14.5 டிரில்லியன் பிரதான விநியோகத்துடன், ரூ.20 முதல் 25 டிரில்லியன் கடன் இடைவெளியை எதிர்கொள்கின்றன.
சிறு தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகள் என்பது கடன். கடன் தொகை திருப்பிச் செலுத்துவதில் உள்ள நம்பகத்தன்மையற்ற சூழல், கடன் பெற தேவையான ஆவணங்களை முறப்படுத்த எடுத்துக் கொள்ளும் கால அவகாசம், பொருளாதார நிதி உதவி பெருவதில் நிலவும் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடும் பொருளாதார சுணக்கங்களை எதிர்கொள்கின்றன.
இந்திய பொருளாதார கட்டமைப்பின் முதுகெலும்பாக உள்ள சிறு குறு நடுத்த நிறுவனங்கள் அமைப்பு இந்திய தொழில்துறையில் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் 40 சதவீதத்தையும், ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 40 சதவீதமும், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத்தையும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கொண்டு உள்ளன.
நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு என்பது தொழில்துறைக்கு சாதகமான சூழலாக காணப்படுகிறது. அது மட்டுமின்றி வேலைவாய்ப்பு, புது புது கண்டுபிடிப்பு மற்றும் முயற்சிகள், பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும், பிராந்திய மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற சூழலை நாட்டில் சமநிலைப்படுத்துவதிலும் இந்த சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
குறிப்பிட்டு கூறும் வகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டின் சமநிலை நிதிச் சூழலை கட்டமைப்பதில் எம்எஸ்எம்இக்களின் பங்களிப்புப் அளப்பறியது. நாட்டில் உள்ள 64 மில்லியன் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் சொற்ப அளவில் வெறும் 14 சதவீத நிறுவனங்களுக்கு மட்டுமே எளிதில் கடன் வசதிகள் கிடைக்கின்றன.
தரவுகளின் அடிப்படையில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிதித் தேவை என்பது 69 புள்ளி 3 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் 70 சதவீதம் பணி மூலதன செலவீனங்களுக்கு தேவையான நிதி என்பது தரவுகளின் அடிப்படையில் தெரியவந்து உள்ளது. தொழில் வளர்ச்சிக்கு திறமையான பணியாளர்கள் என்பது மிக அவசியம்.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்த அடிப்படையை புரிந்து கொண்டு தங்களது பணியாளர்களுக்கு வேலைக்கான பயிற்சி உள்ளிட்டவைகளை வழங்குகின்றன. எதிர்பாராதவிதமாக சிறு தொழில் நிறுவனங்களில் இந்த பயிற்சி என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. அதன் காரணமாகவே சில சிறு தொழில்களில் ஈடுபட பணியாளர்கள் பற்றாக்குறை என்பது நீண்ட காலமாக நிலவி வருகிறது.
மேலும், தொழில்முனைவோர் வர்த்தகம் சார்ந்த சரக்கு மற்றும் சேவைகள் குறித்து நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். தொழிலில் சுணக்கம் ஏற்படும் அதை எதிர்கொண்டு நிறுவனத்தை சீராக கொண்டு செல்லும் சூத்திரத்தை அவர் அறிந்து இருக்க வேண்டும். இதுவே முதலீடு மற்றும் நிதி, விற்பனை கண்காணிப்பு, உள் மற்றும் வெளி செலவீனங்கள் உள்ளிட்டவைகளாகும்.