தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

பல்வேறு முதன்முறை அம்சங்களால் கவனம் பெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் - American Presidential Election - AMERICAN PRESIDENTIAL ELECTION

வரும் நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்கர்கள் தங்களுக்கு பிடித்தமான அதிபர் வேட்பாளரை வாக்களித்து தேர்வு செய்ய உள்ளனர். இதுவரை அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இப்போது நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலைப் போல இனி ஒரு முறை வாழ்நாளில் பார்க்க வாய்ப்பில்லை.

டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ்
டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் (image credit-Etv Bharat)

By Rajkamal Rao

Published : Sep 28, 2024, 1:06 PM IST

ஹைதராபாத்:நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல், உண்மையில் அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு முதன் முறை அம்சங்களைக் கொண்டுள்ளது. அமெரிக்கர்கள் நவம்பர் 5ஆம் தேதி தங்களுக்கு பிடித்தமான அதிபர் வேட்பாளரை வாக்களித்து தேர்வு செய்ய உள்ளனர். இதுவரை அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இப்போது நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலைப் போல இனி ஒரு முறை வாழ்நாளில் பார்க்க வாய்ப்பில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல் காலகட்ட சுழற்சியில் 2008ஆம் ஆண்டு வரை, 1789ஆம் ஆண்டு ஜார்ஜ் வாஷங்டன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு அதிபர் தேர்தலிலும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்களே எதிர் எதிர் அணியில் இருந்து போட்டியிடுவர். 2008ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதுவரை இல்லாத அளவுக்கு கறுப்பினத்தை சேர்ந்த முதலாவது அதிபராக பாரக் ஒபாமா வெற்றி பெற்றார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முதன்முறையாக பெண் வேட்பாளராகப் போட்டியிட்ட ஹில்லாரி கிளிண்டன், வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப்புக்கு மிகவும் நெருக்கமாக வாக்குகளைப் பெற்றார். வெற்றி பெற்ற டிரம்ப் அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர் அல்ல. ஒரு தொழிலதிபராக இருந்து அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இந்த அம்சங்கள் எல்லாம் வரலாற்று ரீதியாக ஆர்வம் ஊட்டுபவை. இந்த ஆண்டு அதிபர் தேர்தல் என்பது வரலாற்று ரீதியாக ஒப்பிடமுடியாத ஒன்றாகும்.

முக்கியமான கட்சியின் வேட்பாளராப் போட்டியிடும் முதலாவது கறுப்பினப் பெண் கமலா ஹாரிஸ்: தமிழ் பிராமண சமூகத்தை சேர்ந்த கேன்சர் ஆராய்ச்சியாளர் சியாமளா கோபாலன், ஜமைக்காவை சேர்ந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார கவுரவ பேராசிரியராகப் பணியாற்றிய டொனால்டு ஹாரிஸ் தம்பதியின் மகளாக கலிபோர்னியா மாநிலத்தில் பிறந்தவர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது சகோதரி மாயா ஆகியோர். அமெரிக்க மரபின்படி தந்தையின் கடைசி பெயரை குழந்தைகளின் பெயரோடு சேர்த்து சூட்டுவார்கள். அப்படித்தான் கமலா என்ற பெயரில் ஹாரிஸ் என்ற அவரது தந்தையின் கடைசி பெயர் இணைந்தது.

இந்த தம்பதி பின்னர் விவாகரத்து பெற்றபோது கமலா ஹாரிஸ் வயது ஐந்து. விவாகரத்து வழக்கின் தீர்ப்பின்படி கமலா ஹாரிஸ் மற்றும் அவரது சகோதரியை அவர்களது தாயே வளர்த்தார். ஆரம்ப காலகட்டத்தில் கலிபோர்னியாவிலும் பின்னர் கன்னடாவிலும் அவர்கள் வளர்ந்தனர். எனினும் கமலா தனது தந்தையின் பெயரை தன் பெயருடன் தொடர்ந்து சேர்த்துக் கொண்டார். கலிபோர்னியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க செனட் தேர்தலில் போட்டியிட்டார். தாம் ஒரு ஆசிய அமெரிக்கர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் விருப்பம் கொண்டிருந்தார். கலிபோர்னியாவில் பெரும் எண்ணிக்கையிலான செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளியினர் இருக்கின்றனர். அவர்கள் கமலா ஹாரிஸ் பிரச்சாரத்துக்கு பெரும் பங்களித்துள்ளனர். செனட்டில் முன் எப்போதும் இல்லாதவகையில் முதலாவது ஆசிய அமெரிக்க பெண்ணாக செனட் உறுப்பினராக வெற்றி பெற்றார்.

பாரம்பரிய கறுப்பின குடும்பத்தில் ஒருபோதும் வாழ்ந்த தில்லை என்ற போதிலும், கறுப்பின குடும்பத்தினருக்கே உரிய பிரச்னைகளை எதிர்கொண்டதில்லை என்ற போதிலும் செனட் உறுப்பினராக வெற்றி பெற்ற கமலா தம்மை கறுப்பினத்தை சேர்ந்த பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டார். 250 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் பிரதிநிதித்துவம் என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த சூழலில் கமலா ஹாரிசின் புத்திசாலித்தனமான நகர்வாக இது பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: "ஐயையோ.. அந்தம்மா ரொம்ப ஆபத்தானவங்க".. கமலா ஹாரிஸ் மீது ட்ரம்ப் புது விமர்சனம்!

இதன்காரணமாக செனட்டில் இரண்டாவது கறுப்பினப்பெண்ணாக கமலா ஹாரிஸ் அறியப்படுகிறார்(முதலாவது கறுப்பினத்தை சேர்ந்த செனட் உறுப்பினர் கரோல் மோஸ்லே (இல்லினாய்ஸ்) ஆவார். இவர் 1993 முதல் 1999 வரை செனட் உறுப்பினராக இருந்தார்) .கடந்த 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தேர்வு போட்டியில் போட்டியிட்டார். ஆனால், அதிபர் தேர்தல் வேட்பாளராக பைடன் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிசை தேர்வு செய்தார். இதன் மூலம் அவர் துணை அதிபர் ஆனார். அரசியல் அதிகாரத்தின் ஒரு அற்புதமான எழுச்சியாக அது பார்க்கப்பட்டது.

அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகிய பைடன் தொடர்ந்து அதிபர் பதவியில் நீடிப்பு:ஜனநாயக கட்சி வேட்பாளராக பைடன்தான் ஆரம்பத்தில் நான்குமாதங்களுக்கு களத்தில் இருந்தார். நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 98 சதவிகிதத்துக்கும் அதிகமான பிரதிநிதித்துவ வாக்குகளைப் பெற்றார். அதே நேரத்தில் பைடன் மற்றும் டிரம்ப் இடையேயான அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் விவாதத்தில், பெரும்பாலான தருணங்களில் பைடன், டிரம்ப்புக்கு இணையாக வாதிடவில்லை. இதனால் ஜனநாயக கட்சி தலைவர்கள் பைடனை வேட்பாளர் போட்டியில் இருந்து விலகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து பைடன் போட்டியில் இருந்து தானாக பதவி விலகுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நம்பமுடியாத நிகழ்வாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ், போட்டியிடுவதை தாம் விரும்புவதாக தெரிவித்தார். பெரும்பாலான ஜனநாயக கட்சி தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். பைடன் போட்டியில் இருந்து விலகிய ஒருமாத காலத்துக்குள் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களம் இறங்கினார். கட்சி தலைவர்கள் இணைந்து கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்தது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன் முறை. மேலும் 2020ஆம் ஆண்டு ஒரு ஓட்டுக்கூட பெறாமல் அல்லது ஒரு பிரதிநிதித்துவ ஓட்டு கூட வாங்காமல் தோற்றவர் இந்த முறை முக்கிய கட்சியின் வேட்பாளராக திடீரென தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டிரம்ப் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் 1892 ஆண்டிற்கு பிறகு இது வரலாற்று நிகழ்வாக இருக்கும்:டிரம்ப் கடந்த 2017-2021 வரை அதிபராக இருந்தார். அதன் பின்னர் பைடன் வெற்றி பெற்றார். இப்போது டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால் 1892க்கு பிறகு வரலாற்று சாதனையாக இருக்கும். 1892ஆம் ஆண்டில் குரோவர் கிளீவ்லேண்ட் முதல் முறை அதிபரான பிறகு ஒரு இடைவெளி விட்டு மீண்டும் அதிபர் ஆனார். இவர் முதன் முறை 1884ல் அதிபர் ஆனால், ஆனால், அடுத்த அதிபர் தேர்தலில் பெஞ்சமின் ஹாரிசனிடம் 1888 தேர்தலில் தோற்றார். மீண்டும் 1892ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதே போலவே இப்போது பைடன் போட்டியிடுகிறார்.

டிரம்ப் மீது ஒருமுறை அல்ல, இரண்டு முறை துப்பாக்கி சூடு:டிரம்ப்பை பொறுத்தவரை அவரது அடிப்படையான காரணங்களால் பெரும்பாலான அமெரிக்கர்கள் மற்றும் பல்வேறு உலகத்தலைவர்களாலேயே அவர் விரும்பப் படுவதில்லை. வார்தைகளில் கடுமை, மிகவும் இனவாதியாக இருப்பவர், 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட வன்முறையால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலானவர் என்று கருதுகின்றனர். பைடன், ஹாரீஸ் இருவரும் மோசடி செய்து வெற்றி பெற்றதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

முன்னாள் அதிபர் என்ற வகையில் டிரம்ப்புக்கு சீக்ரட் சர்வீஸ் பாதுகாப்பு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு காரணமாக பெனிசில்வேனியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். அவருக்கு பாதுகாப்பு வழங்கிய சீக்ரட் சர்ஸ்வீஸ் பாதுகாவலர்கள் ஏகே-47 துப்பாக்கியுடன் இருந்த ஒரு இளைஞரை சுட்டுக்கொன்றனர். இதற்கு முன்பு இதே போல 1981ஆம் ஆண்டு மார்ச் 30ல் அதிபராக இருந்த ரொனால்டு ரீகனை கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவர் உயிர் தப்பினார்.

ஃபுளோரிடாவில் டிரம்ப் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தபோது யுக்ரைன் ஆதரவாளர் ரியான் ரவ்த் என்பவர் கொல்வதற்காக காத்திருந்தார். அப்போது சீக்ரட் சர்வீஸ் பாதுகாவலர் ஒருவரை அவரை கண்டு சுட்டார். இதில் அந்த நபர் தப்பி சென்றார். பின்னர் பிடிபட்டார். நவம்பர் 5ஆம் தேதி யார் வெற்றி பெறுவார் என்பது முக்கியமல்ல. அவர்கள் நிச்சயம் வரலாறு படைப்பார்கள்.

ABOUT THE AUTHOR

...view details