தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

"2047க்குள் அனைவருக்கும் காப்பீடு"-சாத்தியமா? இந்திய காப்பீடுத் துறையில் சீர்திருத்தம் அவசியமா? நிபுணர் கூறுவது என்ன? - ஆயுள் காப்பீடு

இந்திய காப்பீட்டு துறையில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய சரியான நேரத்தில் நாடு இருப்பதாக மிசோரம் மத்திய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் என்.விஆர். ஜோதி குமார் இந்த செய்தித் தொகுப்பின் மூலம் விவரிக்கிறார்...

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 8:53 PM IST

ஐதராபாத் :இந்திய காப்பீட்டு துறை என்பது 34 பொது காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை கொண்டு இயங்குகிறது. குறிப்பிடத்தக்க ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பட்டியலில் ஒரே பொதுத் துறை நிறுவனமாக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) உள்ளது.

அதேநேரம் பொது காப்பீட்டு நிறுவனங்கள் பட்டியலில் 6 பொதுத் துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கூடுதலாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு, காப்பீடு வழங்கும் பட்டியலில் ஒரேயொரு நிறுவனமாக ஜெனரல் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் காப்பீடு துறையில் இந்தியா மிகவும் பின்தங்கி காணப்படுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா 4 சதவீதம் மட்டுமே காப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகளாவிய சரசாரியான 6 புள்ளி 8 சதவீதத்தை காட்டிலும் அது குறைவு எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் காப்பீடு அடர்த்தி என்பது 92 டாலர் என்ற அளவில் உள்ள நிலையில், உலக சராசரி 853 டாலராக உள்ளது. காப்பீட்டு சந்தையில் அமெரிக்கா கொடி கட்டி பறக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் பொது மற்றும் ஆயுள் காப்பீடுகள் மூலம் மட்டும் அமெரிக்கா 3 டிரில்லியன் டாலர் அளவில் பிரீமியம் திரட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் பிரிட்டன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. ஒட்டுமொத்த உலக பிரீமியத்தில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் மற்றும் 55 சதவீதத்தை கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் 10 இடத்தில் உள்ள இந்தியாவின் பிரீமியம் மதிப்பு 131 பில்லியன் டாலர் என்றும் உலக சராசரியில் 1 புள்ளி 9 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் காப்பீட்டு சந்தைகளில் ஒன்றாக காணப்படும் இந்தியா 2032ஆம் ஆண்டுக்குள் 6வது பெரிய காப்பீட்டு சந்தையாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆயுள் காப்பீடுகள் சேமிப்பை பிரநிதித்துவப்படுத்தும் வகையிலும் சிறிய அளவிலான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது.

இயற்கை பேரிடர்களால் பாதிப்பு விளைவிக்கக் கூடும் 93 சதவீதம் நாட்டில் அடிப்படை காப்பீடுகளை கூட செய்யாதவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், வறுமை கோட்டுக்கு மேல் உள்ள 40 கோடி பேர் சுகாதாரத்திற்கு தேவையான அடிப்படை காப்பீடுகளை கூட மேற்கொள்ளாதவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் இந்தியாவில் அன்றாட பணிகளில் ஈடுபட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டுபவர்களில் கூட 90 சதவீதம் பேர் தங்களுக்கான சமூக பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கத் தவறியவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களை "மிஸ்ஸிங் மிடில்" என்ற நடுத்த வர்க்கத்தினர் என வகைப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

அதாவது மிஸ்ஸிங் மிடில் பட்டியலில் இருக்கும் மக்கள் அரசின் மானிய வரம்புக்குள் இல்லாத வகையில் வறுமையில் வாழ்பவர்களாக இல்லாமலும், அதேநேரம் பெரும் செல்வந்தர்களாக அல்லாத நிலையிலும் காப்பீடு செய்ய போதிய வசதி வாய்ப்புகளை கொண்டு இருக்காமலும் உள்ளதாக கூறப்படுகிறது.

2047ஆம் அண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை எட்ட ஏதுவாக பல துறைகளையும் இணைக்கும் வகையிலான சரியான விலை, காப்பீடுகளில் பங்களிப்பு உள்ளிட்ட வசதிகள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை பேரிழிவுகள் மூலம் கடந்த 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இது நாட்டின் குறைந்த காப்பீட்டு பங்களிப்பை சுட்டுகாட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. 1900க்கு பிறகு அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய அதிக பேரிடர்களை எதிர்கொண்ட நாடாக அறியப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் வெப்ப மற்றும் குளிர் அலைகள், சூறாவளி மற்றும் மின்னல், அதிகபட்ச மழைப் பொழிவு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என நாள்தோறும் ஒரு பேரிடரை எதிர் கொண்டு உள்ளது.

இந்த பேரழிவுகள் மூலம் ஏறத்தாழ 2 ஆயிரத்து 700 பேர், 18 லட்சம் ஹெக்டேர் பயிர் நிலம், 4 லட்சத்து 16 லட்சம் வீடுகள் மற்றும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் டவுன் டூ எர்த் என்ற இதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற பேரிடர்களில் இருந்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை பாதுகாப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் விளக்கப்படுகின்றன. குறிப்பாக விவசாயிகள், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், அதிக பேரிடர்கள் தாக்கும் பகுதிகளில் இருப்பவர்கள் தங்களது உடைமைகளை பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் பாதுகாப்பது தொடர்பாக அறிவுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்னூதாரணமாக கலிபோர்னியா நிலஅதிர்வு ஆணையம், ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைப்பு, துருக்கி பேரழிவு காப்பீட்டு நிறுவனங்கள் அசையா சொத்துகள் மூலம் நிதி திரட்டல் மற்றும் அரசு மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களிடம் காப்பீட்டு செய்வது தொடர்பாக தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று இந்தியாவிலும் பொதுதுறை நிறுவனங்கள் மூலம் மக்களிடையே காப்பீடு குறித்த போதிய விழிப்புணர்வுகளை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சாலை விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைபவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை முற்றிலும் பணமில்லா பர்வர்த்தணை நடைமுறையை அடுத்த சில மாதங்களில் கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் அதிகளவில் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. மத்திய அரசின் தரவுகளின் படி இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கு 19 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 61 ஆயிரம் சாலை விபத்துகள் அரங்கேறிய நிலையில், அதில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இத்தகைய சூழலில் விபத்து குறித்து விசாரணை நடத்தி கமிட்டு அளித்த அறிக்கையில், விபத்துக்குள்ளான பெருமாபாலான வாகனங்கள் வர்த்தக பயன்பாட்டுக்கானது என்றும் அதில் பெருவாரியான வாகனங்கள் முறையாக காப்பீடு செய்யாதவை என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்திய இன்சூரன்ஸ் தகவல் ஆணையத்தின் ஆண்டு மோட்டார் அறிக்கையின் படி கடந்த 2020 மார்ச் மாத கணக்கின் படி ஏறத்தாழ 25 கோடியே 33 லட்ச வாகனங்கள் முறையாக இன்சூரன்ஸ் பெறாதவை என்றும் ஒட்டுமொத்த அளவில் இது 56 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக வாகனங்கள் மூலம் ஏற்படும் பெரும்பாலான விபத்துகளால் அப்பாவி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவதாகவும் விபத்துக்கு பின்னர் தான் அந்த வாகனங்களுக்கு போதிய காப்பீடு வசதிகள் இல்லை என்பது தெரியவருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதன் பின்னரே இந்திய இன்சூரன்ஸ் தகவல் ஆணையம் mParivahan, மற்றும் தேசிய தகவல் மையம் தரவு ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் மூலம் மாநிலங்கள் முழுவதும் eChallan அமலாக்கத்தை செயல்படுத்த பரிந்துரைத்து உள்ளது.

40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கான காப்பீட்டுத் துறையின் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, அரசு தரப்பில், இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு முதிர்வு பத்திரங்களை வெளியிடலாம் என்று தெரிவித்தது. இந்த பொதுத் துறை நிறுவனங்களின் நிர்வாகத்தில் போட்டித்திறன் மற்றும் செயல்திறன் மற்றும் புதுமை ஆகியவற்றின் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கும், போதுமான மூலதனத்தை ஈர்ப்பதற்கும் சரியான வழிகாட்டி என்பது தேவையானதாக கருதப்படுகிறது.

கடந்த 2022ஆம் அண்டு உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வின் படி இந்தியாவில் மட்டும் 5 கோடியே 50 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சையில் இதர செலவுகள் மூலம் அதிகளவிலான தொகையை இழப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசின் தரவுகளின் படி ஆண்டுதோறும் 6 கோடியே 30 லட்சம் பேர் தங்களது மருத்துவ செலவுகளின் காரணமாக ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதர செலவுகள் மூலம் நிதி இழப்பு என்பது இந்தியாவில் அதிகளவில் இருப்பதாகவும் அதேநேரம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களில் மிக அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக உத்தர பிரதேசத்தில் நோயாளிகள் இதர செலவுகள் மூலம் 71 சதவீதம் தங்களது வருவாயை இழப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் 68 சதவீதமாக உள்ளது. மற்ற மாநிலங்களை ஈடுகட்டும் வகையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி ஆகியவை கடந்த 2022-23 நிதி ஆண்டில் நாட்டின் மொத்த சுகாதார காப்பீட்டு பிரீமியத்தில் மூன்றில் இரண்டு பங்கு நிதி பங்களிப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2017 ஆம் ஆண்டு தேசிய சுகாதாரக் கொள்கையின்படி, ஒவ்வொரு இந்தியருக்கும் மலிவு விலையில் தரமான சுகாதார சேவைகளை உலகளாவிய சுகாதார பாதுகாப்பு மற்றும் வழங்குதல் என்ற போற்றத்தக்க இலக்கை இந்தியா அடைய முடியாது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க :இந்தியாவின் 5 டிரில்லியன் பொருளாதார இலக்கு.. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆய்வில் செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details