தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

முன் நெற்றியில் முடி உதிர்வா? கொட்டிய முடியை வளர வைக்க 5 சூப்பர் டிப்ஸ் இதோ!

பெண்களுக்கு ஆண்களை போல வழுக்கை அல்லது சொட்டை ஏற்படாது என்றாலும், முன் நெற்றியில் முடி கொட்டி முக அழகை கெடுக்கும். இந்த பிரச்சனையால் நீங்களும் அவதிப்பட்டால்,கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 3, 2024, 11:02 AM IST

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முடி கொட்டுவது ஒரு புறம் பிரச்சனையாக இருக்க, மறு புறம் முன் நெற்றியில் முடி கொட்டுவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு முன் நெற்றியில் முடி கொட்டி முக அழகை மாற்றுகிறது. முடி கொட்டும் பிரச்சனை ஒரே இரவில் சரியாகாது என்றாலும், இயற்கையான சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி காலப்போக்கில் நல்ல மாற்றத்தை காணலாம். அந்த வகையில், முடி உதிர்வை தடுத்து, முடி வளரச் செய்யும் டிப்ஸ்களை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.

  • தேங்காய் எண்ணெய் மசாஜ்:வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள், கொழுப்பு அமிலங்கள் நிறைந்த தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது. இது, முடியின் வேர்களை வலுப்படுத்துவதோடு, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

எப்படி பயன்படுத்துவது?: முடியின் அளவை பொருத்து தேங்காய் எண்ணெய்யை சூடாக்கவும். கை பொருக்கும் சூட்டில் எண்ணெய் இருக்கும் போது, உச்சந்தலையில் தடவி விரல் நுனிகளால் 5 முதல் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின், அரை மணி நேரம் அல்லது ஒரு இரவு அப்படியே வைத்து, ஷாம்புவால் கழுவி வர முடி வளர்ச்சி மேம்படும்.

Coconut oil, Aleovera (Credit - ETVBharat)
  • முடி உதிர்வை தடுக்கும் கற்றாலை: பழங்காலங்களாக, தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க கற்றாழை பயன்படுகிறது. இது, இறந்த செல்களை அகற்றி உச்சந்தலையை நன்கு பராமரிக்க உதவுகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்சைம்கள் கற்றாழையில் உள்ளதால், இது உச்சந்தலையில் pH அளவை சமநிலைப்படுத்தும். கூடுதலாக, பொடுகு ஏற்படுவதை தடுக்கும்.

எப்படி பயன்படுத்துவது?:கற்றாழை ஜெல்லை நேரடியாக உச்சந்தலை மற்றும் முடியில் தடவி மசாஜ் செய்து, 1 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். பின்னர், குளிர்ந்த நீரில் முடியை அலசினால், முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். வாரத்திற்கு 2 முறை இதை பின்பற்றுங்கள்.

  • முடி வளர்ச்சிக்கு வெங்காயம்: வெங்காய சாற்றில் உள்ள கந்தகம் (Sulfur) கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர உதவி செய்கிறது. அதுமட்டுமல்லாமல், வெங்காய சாறு உச்சந்தலையில் உள்ள தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி பயன்படுத்துவது?:இரண்டு பெரிய வெங்காயங்களை நறுக்கி நன்றாக அரைத்து, சாற்றை மற்றும் தனியாக வடிகட்டவும். இப்போது, ஒரு காட்டன் பஞ்சை பயன்படுத்தி வெங்காய சாற்றை உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வர முடி வளர்ச்சி மேம்படும்.

Onion, oil (Credit - ETVBharat)
இதையும் படிங்க:கேரளா பெண்களை போல முடி வளர வேண்டுமா?வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெய்-ஐ தேய்த்தால் கரு கரு முடி நிச்சயம்!!
  • முடி அடர்த்திக்கு கேஸ்டர் ஆயில்: ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம், உச்சந்தலையில் சுழற்சியை மேம்படுத்துவதோடு, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனை அடிக்கடி பயன்படுத்தி வர, புதிய முடி வளர்வதை காணமுடியும். இருப்பினும், கேஸ்டர் ஆயிலை நேரடியாக பயன்படுத்தாமல், தேங்காய் எண்ணெயுடன் பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்துவது?: 3 டீஸ்பூன் கேஸ்டர் ஆயிலுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து சூடாக்கவும். பின்னர், 5 முதல் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து, குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அல்லது ஒரு இரவு விட்டு விடுங்கள். அதன் பின், மென்மையான ஷாம்பு பயன்படுத்தி கழுவவும். சிறந்த முடிவுகளை பெற வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இதை செய்து வாருங்கள்.

EGG (Credit - ETVBharat)
  • முடி வளர்ச்சியை ஊக்குவிக்க முட்டை மாஸ்க்: முடி ஆரோக்கியத்திற்கு தேவையான புரோட்டீன், பயோட்டின் முட்டையில் நிறைந்துள்ளது. முட்டையில் உள்ள புரதச்சத்து முடி வேர்களுக்கு ஊக்கமளிக்கும், அதே நேரத்தில் பயோட்டின் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதுமட்டுமல்லாமல், முடியை மென்மையாக மாற்றும் பண்பும் உள்ளது.

எப்படி பயன்படுத்துவது?: இரண்டு அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளை கருவை உச்சந்தலை மற்றும் முடியிலும் நன்கு தடவி, 30 நிமிடங்களுக்கு விடவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு கழுவவும். முடி வளர்ச்சி மற்றும் முடி பளபளப்பாக வாரத்திற்கு ஒரு முறை முட்டை மாஸ்க் பயன்படுத்துங்கள்.

இதையும் படிங்க:குளிர்காலத்தில் பொடுகு தொல்லை அதிகரித்து முடி கொட்டுகிறதா? இந்த ஹேர் மாஸ்குகளை ட்ரை பண்ணுங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ABOUT THE AUTHOR

...view details