எல்லா பெண்களும் பட்டு போன்ற மென்மையான கூந்தலுக்குத் தான் ஆசைப்படுவர். ஆனால் சூரிய ஒளி பாதிப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்பு ஆகியவற்றால் கூந்தல் வறண்டு, பொலி விழந்து காணப்படலாம். இது மட்டுமில்லாமல் ஹேர் ஸ்டைலிங் செய்யும் ஹேர் ஸ்ட்ரைட்னர் மற்றும் ஹேர் டிரையர் உள்ளிட்ட வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்துவதாலும் கூந்தல் வறட்சி ஏற்படும். கூந்தல் வறட்சியால் முடி உடைதல், முடி உதிர்வு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படலாம். அந்த வகையில், இந்த முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்க உதவும் ஹேர் பேக்குகளை பயன்படுத்தி பாருங்கள்.
தயிர் மற்றும் தேன்: ஒரு கிண்ணத்தில் தயிருடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இப்போது இதை உச்சந்தலை முதல் முடி வேர் வரை நன்கு தடவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர், ஷாம்பு போட்டு அலசினால் கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த பேக்கை வாரம் இருமுறை பயன்படுத்தி வர முடியில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
தயிர் மற்றும் ஆலிவ் எண்ணெய்: ஒரு கப் தயிரில் 4 டீஸ்பூன் அலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து உச்சந்தலை முதல் அனைத்து முடியிலும் நன்கு படும் அளவிற்கு தேய்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர், ஷாம்பு கொண்டு கூந்தலை அலச வேண்டும். இது, முடி வளர்ச்சி, முடி உதிர்வு போன்றவற்றை தடுக்கவும் முடியை பளபளப்பாகவும் உதவுகிறது. இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வர, கணிசமான மாற்றத்தை பெறலாம்.
தயிர்: அரை கப் தயிரை உச்சந்தலை முதல் முடி வேர்வரை நன்கு தடவு, சுத்தமான காட்டன் துணியை கட்டவும். அரை மணி நேரத்திற்கு பிறகு, ஷாம்புவால் முடியை அலசினால் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். இதனை வாரத்திற்கு ஒன்று முதல் இரு முறை பயன்படுத்தினால் பலன்களை பெறலாம்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் பொடுகு தொல்லை அதிகரித்து முடி கொட்டுகிறதா? இந்த ஹேர் மாஸ்குகளை ட்ரை பண்ணுங்க!
பொறுப்புத் துறப்பு: இங்கே, உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணர் ஆலோசனை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றுவதற்கு முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரை அணுகுமாறு பரிந்துரைக்கிறோம்.