தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

10 நிமிடத்தில் ரெடியாகும் பாஸ்தா ரெசிபி..வீட்டிலேயே ஆரோக்கியமா செய்ங்க! - PASTA RECIPE

குழந்தைகள் விரும்பி உண்ணும் பாஸ்தாவை ஆரோக்கியமாக வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 24, 2025, 10:40 AM IST

பரபரப்பான காலையில் குழந்தைகளுக்கு என்ன பிரேக்பாஸ்ட் செய்வது என தெரியவில்லையா? என்ன செய்து கொடுத்தாலும் சாப்பிட அடம்பிடிக்கிறார்களா? வாரத்திற்கு ஒரு முறை 10 நிமிடத்தில் தயாராகும் இந்த பாஸ்தாவை செய்து கொடுங்கள்.

செய்முறை:

  • பாஸ்தா - 1 கப்
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • குடைமிளகாய் - 1
  • கேரட் - 1
  • பூண்டு - 4 பல்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
  • மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பாஸ்தா செய்முறை:

  • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, பாஸ்தா மூழ்கிற அளவிற்கு தண்ணீர் ஊற்றி, பாஸ்தாவை சேர்த்து வேக வைக்கவும். இதில் சிறிதளவு உப்பு மற்றும் அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
  • பாஸ்தா வெந்ததும், அடுப்பை அணைத்து அதிகப்படியான நீரை வடிகட்டி குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசி தனியாக வைக்க வேண்டும். இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி பூண்டு, வெங்காயம் மற்றும் கேரட் சேர்த்து வதக்க வேண்டும்.
  • பின்னர், அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பிற்கு குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கிய பின்னர், வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்தால் பாஸ்தா தயார்.

ABOUT THE AUTHOR

...view details