தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

டைல்ஸ் இடையே படிந்திருக்கும் கறை போகவே மாட்டீங்குதா? ஒரு முறை இதை வைத்து சுத்தம் செய்யுங்கள்! - TILES CLEANING TIPS

பேக்கிங் சோடாவில் தண்ணீர் கலந்து டைல்ஸ் இடையே தடவி தேய்த்து கழுவினால், பல வருடங்களாக படிந்திருக்கும் கறை நீங்கி டைல்ஸ் புதிது போல் பளபளப்பாக இருக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 6, 2025, 4:23 PM IST

என்ன தான் வீட்டை சுத்தமாகவும், பளபளவென்று வைக்க வேண்டும் என நினைத்து வாரத்திற்கு மூன்று முறை வீட்டை கழுவினாலும், வீட்டில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸில் உள்ள கறையை நீக்குவது கடினம் தான். மார்கெட்டில் கிடைக்கும் பல லிக்விட்களை வாங்கி தேய்த்து கழுவினாலும், டைல்ஸ் இடையே படிந்திருக்கும் கறை அப்படியே இருக்கும். இந்த கறை போகாவே போகாது என பலரும் அப்படியே விட்டு விடுகின்றனர். இந்நிலையில், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செலவே இல்லாமல் டைல்ஸ் இடையே படிந்திருக்கும் கறையை எப்படி நீக்குவது என்பதை பார்க்கலாம்.

வினிகர் மற்றும் தண்ணீர்: வெதுவெதுப்பான நீரில் வினிகர் சேர்த்து கலக்கவும். பிறகு, இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அழுக்கு படிந்திருக்கும் டைல்ஸ் இடையே ஸ்ப்ரே செய்து 5 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர், ஒரு பிரஸ் பயன்படுத்தி தேய்த்தால் டைல்ஸ் இடையே படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கும்.

கோப்புப்படம் (Credit - Pexels)

எலுமிச்சை சாறு: அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் எலுமிச்சை பழம், டைல்ஸ் பளபளப்பாகவும் உதவியாக இருக்கிறது. எலுமிச்சை பழச்சாற்றை தண்ணீரில் கலந்து, அழுக்கு படிந்திருக்கும் இடத்தில் தெளித்து, ஸ்க்ரப்பர் மூலம் தேய்த்தால் நீண்ட நாட்களாக படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கும்.

கோப்புப்படம் (Credit - Pexels)

பேக்கிங் சோடா:டைல்ஸ் இடையே உள்ள கரையை அகற்ற பேக்கிங் சோடா பயனுள்ளதாக இருக்கும். ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்யவும். பின்னர், இதை கறை படிந்திருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு, இதனை ஸ்க்ரப் பயன்படுத்தி சுத்தம் செய்தால் டைல்ஸ் புதிது போல் இருக்கும்.

கோப்புப்படம் (Credit - Pexels)

இதையும் படிங்க:

கொத்தமல்லி வேகமாக வளர முக்கியமான 4 ஸ்டெப் இதான்..'இந்த' நீரை தெளித்து வந்தால் கொத்தமல்லி காடு மாதிரி வளர்வது நிச்சயம்!

அகல் விளக்கில் எண்ணெய் பிசுக்கு நீங்க இப்படி கழுவினால் போதும்..இனி, கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை!

பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ABOUT THE AUTHOR

...view details