ETV Bharat / lifestyle

பிற மொழியை கற்க சிரமப்படுகிறீர்களா? இந்த டிப்ஸ்களை ஒரு முறை பின்பற்றி பாருங்களேன்! - TIPS TO LEARN NEW LANGUAGE

நீங்கள் பிற மொழியை கற்க துவங்கும் போது, அந்த மொழியில் உள்ள இசை மற்றும் படங்களை பார்ப்பது மொழி குறித்த புரிதலை அதிகரிக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 21, 2025, 5:21 PM IST

பிற மொழியை கற்பது என்பது ஒரு பயணம்! இது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் சரியான வழிகளைப் பின்பற்றினால், கட்டாயம் சுவாரஸ்யமாக மாறிவிடும். அந்த வகையில், மற்ற மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி எளிமையாக மொழியை கற்றுக்கொள்ள துவங்குங்கள்.

  • பொதுவாக, நாம் ஒரு தெரியாத அல்லது புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள தொடங்கும் போது, பயத்தையும் தயக்கத்தையும் எதிர்கொள்வது இயல்பு தான். அதற்காக, அச்சப்பட்டு பின்வாங்காமல், சின்ன சின்ன இலக்குகளை நிர்ணயிங்கள். இந்த இலக்குகளை முடிக்கும் போது, மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் பிறந்து மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிக்கும்.
  • நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மொழியில் மற்றவர்களுடன் பேச முயற்சி செய்யுங்கள். உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட வார்த்தையை நீங்கள் கற்றுக்கொண்டால், அதை மற்றவர்களிடம் செல்லுங்கள். இப்படி செய்வதால் வார்த்தைகள் மறக்காமல் நினைவில் இருக்கும்.
  • நீங்கள் கற்றுகொள்ள விரும்பும் மொழியில் இசை கேட்க மற்றும் திரைப்படம் பார்க்க தொடங்குங்கள். இவற்றின் மூலம், மொழியின் உணர்ச்சிகள் புரிவதோடு சொற்களை எப்படி பயன்படுத்துவது என்கிற புரிதல் கிடைக்கும்.
  • ஒவ்வொரு நாளும் புதிய சொற்களை கற்றுக்கொண்டு நீங்களாக புதிய சொற்றொடர்களை அமைக்க முயற்சிக்கவும். புதிய சொற்களைக் கற்றுக்கொள்வது ஆர்வத்தை அதிகரிப்தோடு மொழி மீதான அன்பையும் அதிகரிக்கும்.
  • நீங்கள் செய்திகளை விரும்புபவராக இருந்தால், நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மொழியில் செய்தித்தாள்களைப் படிக்க மற்றும் டிவி பார்க்க தொடங்குங்கள். புரியாத சொற்களுக்கான அர்த்தத்தை மொபைலில் தேடி தெரிந்து கொள்ளுங்காள்.
  • நாள் முழுவதும் என்ன செய்கிறீர்களோ, அதை நீங்கள் கற்கும் மொழியில் எழுதப் பழகுங்கள். உங்கள் அனுபவங்கள், எண்ணங்கள் மற்றும் நீங்கள் விரும்பும் விஷயங்களை தினசரி எழுதும் போது நிறைய வார்தைகளை கற்றுக்கொள்ளலாம். மொழி கற்பதற்கு என பல செயலிகள் அறிமுகமாகியுள்ளது. அவற்றின் உதவியுடன் மொழிகளை கற்கத் துவங்குங்கள்.
  • நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மொழியைப் பேசும் நபர்களுடன் நட்பு கொள்ளுங்கள். அவர்களைச் சந்திக்கும் போது அதே மொழியும் பேசுங்கள். உங்கள் வார்த்தைகளில் தவறுகள் இருப்பின், அதனை அவர்கள் திருத்துவார்கள்.
  • மொழியைக் கற்க விரும்புபவர்கள் புத்தகங்களைப் படிக்கவும், பாடல்களைக் கேட்கவும் வேண்டும். உங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் மற்றவர்களுடன் நீங்கள் வெளிப்படுத்துவது போல் அதே மொழியில் வெளிப்படுத்துங்கள்.
  • மற்றவர்களுடன் புதிய மொழியில் பேசுவதற்கு அச்சமோ அல்லது தயக்கமாக இருந்தால், கண்ணாடி முன் நின்று பேசிப்பழகுங்கள். மொழியை கற்க நினைப்பவர்கள், எழுத்துகளை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். பின்னர், வார்த்தைகளை கற்றுக்கொள்ளும் போது எளிமையாக இருக்கும்.
  • புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு முன்முயற்சி தேவை. நீங்கள் வெட்கம் மற்றும் கூச்சத்தை விட்டு வெளியேறி புதிய நபர்களுடன் பேச தொடங்கி, புதியவற்றை கற்றுக்கொள்ள தொடங்குங்கள்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது இவ்வளவு ஈஸியா? பெற்றோர்களே இது உங்களுக்கு தான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.