தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையில், பலரும் தினசரி சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தூக்கம். தூங்குவதற்கு நேரம் கிடைத்தும் பல்வேறு காரணங்களால் தூங்க முடியாமல் சிரமம்படுபவர்கள் அதிகமாக உள்ளனர். நான்கு சுவர்களுக்குள் தூங்கும் நமக்கே இப்படி ஒரு பிரச்சனை என்றால், எல்லையில் எப்போதும் விழிப்புடன் இருக்கும் ராணுவ வீரர்களின் நிலை என்ன என்பதை யோசித்து பார்த்திருக்கிறீர்களா?
எந்த மாதிரியான சுற்றுசூழலிலும், சத்தத்திலும் கூட ராணுவத்தினர் படுத்ததும் தூங்கி விடுவார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ராணுவ வீரர்களை நொடிப்பொழுதில் தூங்க வைக்க ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது தான் 'மிலிட்டரி ஸ்லீப்பிங் மெத்தட்'(MILITARY SLEEPING METHOD).

இந்த முறையை கடைபிடித்தால் இரண்டே நிமிடங்களில் எளிதாக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். தூக்கக் கோளாறுகளை ஆராய்ந்து சிகிச்சை அளிக்கும் டாக்டர் பிரையன், இந்த ராணுவ தூக்க முறை சிறந்த பலனைத் தருவதாகவும் விளக்குகிறார். 2017 ஆம் ஆண்டில் National Center for Complementary and Integrative Health இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் "இராணுவப் பணியாளர்களுக்கான தூக்கம் மற்றும் தளர்வு நுட்பங்கள்" குறித்து கண்டறியப்பட்டது.
மிலிட்டரி ஸ்லீப்பிங் மெத்தட் என்றால்?..இந்த இராணுவ உறக்க வித்தையின்படி முதலில் கண்களை மூடி இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்துக்கொண்டு மெதுவாக சுவாசிக்கவும். சுவாத்தை கவணித்து கொண்டே, தலை, கண், முகம், தோள்கள் தொடங்கி கால்களை தளர்த்தவும். அதன் பிறகு, மனதை ஒரு கற்பனை உலகிற்கு கொண்டு செல்ல வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அமைதியான சூழலில் நீல வானத்தின் கீழ் ஒரு புல்வெளியில் தனியாக படுத்திருப்பது அல்லது ஒரு இருண்ட அறையில் ஊதா நிற தொட்டிலில் ஊசலாடுவது போல கற்பனை செய்ய வேண்டும். இதைச் செய்வது ஒரு ரிலாக்சேஷன் டெக்னிக் என்றும், மனது எதிர்மறை எண்ணங்களை அழிக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் நிம்மதியாக உறங்குவோம் என்கிறார்கள்.

ஒலிம்பிக் ஸ்பிரிண்ட் பயிற்சியாளர் பட்விண்டரும் இந்த மிலிட்டரி ஸ்லீப்பிங் டெக்னிக் சில நொடிகளில் நம்மை மயக்கமடையச் செய்யும் என்று கூறுகிறார். குறிப்பாக ஆழ்ந்த சுவாசம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது மற்றும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது தூக்கத்திற்கு காரணமான இயற்கை ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பின்னர் என்ன? இன்றிரவு முதல் இந்த இராணுவ வித்தையைப் பின்பற்றி நிம்மதியாக தூங்க முயற்சி செய்யுங்கள்.
இதையும் படிங்க:
நீங்கள் சரியாக தூங்குகிறீர்களா? மருத்துவர்கள் கூறும் முக்கிய அறிவுரை! - How Much Sleep Need Age Wise
பொறுப்புத் துறப்பு: இங்கே, உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணர் ஆலோசனை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரை அணுகுமாறு பரிந்துரைக்கிறோம்.