ETV Bharat / lifestyle

வீட்டிலேயே சாஃப்டான பனீர் செய்வது எப்படி? உங்களுக்காக 4 சூப்பர் டிப்ஸ் இதோ! - SOFT PANEER RECIPE

திரிந்த பாலை துணியில் ஊற்றி 30 நிமிடங்களுக்கு கட்டி தொங்க விடும் முறையை பின்பற்றும் போது சாஃப்டான பனீர் கிடைக்கும். வீட்டிலேயே சுலபமாக பனீர் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Freepik)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 21, 2025, 2:34 PM IST

உணவகங்களில் கிடைப்பதை போல, பனீர் பட்டர் மசாலா, பனீர் புர்ஜி, பனீர் டிக்கா போன்ற உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா? இதற்காக ஒவ்வொரு முறையும் கடையில் பனீர் வாங்க வேண்டும் என நினைக்கிறீர்களா? இனி, கவலைய விடுங்க..வீட்டிலேயே சுலபமாகவும், குறைந்த நேரத்தில் பனீர் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டு வகைவகையான உணவுகளை செய்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

  • பால் -2 லிட்டர்
  • எலுமிச்சை பழ சாறு - 4 முதல் 5 தேக்கரண்டி
  • மெல்லிய துணி - (பன்னீரை வடிகட்ட)

சாஃப்ட் பனீர் செய்முறை:

  • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, மிதமான தீயில் பால் ஊற்றி சூடாக்கவும். பால் கொதிக்கும் போது மேலே படரும் பாலாடையை தனியாக எடுத்து வைக்கவும்.
  • இப்போது வினிகர் அல்லது எலுமிச்சை பழ சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக பாலில் ஊற்றவும். பால் திரிந்து, தனித்தனியாக வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  • பின்னர், ஒரு பெரிய கிண்ணத்தின் மீது வடிகட்டி வைத்து, அதன் மேல் சுத்தமான காட்டன் துணி அல்லது சீஸ் துணி பயன்படுத்தி திரிந்த பாலை வடிகட்டவும்.
  • எலுமிச்சை அல்லது வினிகர் வாசனையை போக்க, பாலை வடிகட்டியதும், அதன் மீது குளிர்ந்த நீரை ஊற்றி கிளறி விடவும்.
  • இப்போது, அந்த துணியை இறுக சுருட்டி, அதன் மீது கனமான பாத்திரத்தை வைத்து 30 நிமிடங்களுக்கு விடவும். பின்னர், துணியை அவிழ்த்து விரும்பிய வடிவில் வெட்டி பயன்படுத்தலாம்.
  • 3 முதல் 4 நாட்களுக்கு பிரிட்ஜில் வைத்தால் பனீர் கெட்டுப்போகாது. அதே போல, நீண்ட நாட்களுக்கு பனீர் கெடாமல் இருக்க ஃப்ரீஸரில் வைக்கவும்.

டிப்ஸ்:

  1. பால் காய்ச்சும் போது, தண்ணீர் சேர்க்கமல் இருந்தால் அதிகப்படியான பனீர் கிடைக்கும்.
  2. வினிகரின் மனம் சிலருக்கு பிடிக்காது என்பதால் எலுமிச்சை சேர்ப்பது சிறந்தது.
  3. ரசமலாய் போன்ற இனிப்பு வகைகளை செய்ய, வீட்டில் பனீர் தயார் செய்வதாக இருந்தால், வடிகட்டிய துணி மேல் கனமான பாத்திரங்களை வைக்காமல், கம்பியில் கட்டி விடுங்கள். இப்படி செய்வதால் ஸ்வீட் செய்யும் போது பனீர் சாஃப்டாக இருக்கும்.
  4. பனீரை வடிகட்டிய பின் கிடைக்கும் தண்ணீரில், பாஸ்தா, நூடுல்ஸ் மற்றும் குழம்பில் சேர்க்கலாம். அதே போல, பருப்புகளை ஊறவைக்கவும் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: கலப்படம் செய்யப்பட்ட பனீரை கண்டறிவது எப்படி?..டக்குனு தெரிஞ்சுக்க 4 சிம்பிள் டிப்ஸ் இதோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.