தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

பிக்பாஸில் காரசார சண்டையை ஏற்படுத்திய கேரளா 'சம்மந்தி' இதான்..மறக்காம நீங்களும் செஞ்சி பாருங்க!

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்களான அன்ஷிதா மற்றும் சாச்சனா இடையே சண்டையை ஏற்படுத்திய கேரளா ஸ்டைல் சம்மந்தியை நீங்களும் ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள். சாதத்திற்கு அட்டகாசமாக இருப்பதோடு இட்லிக்கும் நன்றாக இருக்கும்.

Sachana, Chammanthi, Anshitha
Sachana, Chammanthi, Anshitha (Credit - Anshitha, Sachana insta page, Getty Images)

By ETV Bharat Lifestyle Team

Published : 16 hours ago

தனியார் தொலக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தமிழகத்தில் பிரபலம் என்றால், நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சம்பவங்கள் மேலும் பிரபலமாக மாறிவிடும். அப்படி, பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்களான அன்ஷிதா மற்றும் சாச்சனா இடையே சண்டையை ஏற்படுத்திய 'கேரளா தேங்காய் சம்மந்தி' தற்போது டபுள் பிரபலமாகியுள்ளது. அவர்கள் மத்தியில் வாக்கு வாதத்தை ஏற்படுத்திய கேரளா பிரபல உணவை நாமும் ஏன் வீட்டில் செய்து பார்க்கக்கூடாது?. 5 நிமிடங்களில் தயாராகும் சம்மந்தியை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..இது சாதத்திற்கு பெஸ்ட் காம்பினேஷனாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 5
  • இஞ்சி - 1 சின்ன துண்டு
  • சின்ன வெங்காயம் - 10 முதல் 15
  • புளி - 1 சின்ன நெல்லிக்காய் அளவு
  • துருவிய தேங்காய் - 1 கப்
  • கல் உப்பு - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 2 கொத்து
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கேரளா சம்மந்தி செய்முறை:

  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாய், நறுக்கி வைத்த இஞ்சி, மற்றும் புளி சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  • வதக்கிய பொருட்கள் நன்கு ஆறியதும், அதனை காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். பின்னர், அதனுடன் உப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். (தண்ணீர் சேர்க்கக்கூடாது)
  • பின்னர், அரைத்து வைத்ததை வேறு பாத்திரத்திற்கு மாற்றி உருண்டை பிடித்தால் கேரளா ஸ்டைல் தேங்காய் சம்மந்தி தயார்.
  • சுடச்சுட சாதத்தில் நாம் தயார் செய்து வைத்துள்ள சம்மந்தியை போட்டு சாப்பிட்டு பாருங்க, குழம்பு பொரியலை தேடவே மாட்டீங்க. தயிர் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிடுவதற்கும் அருமையாக இருக்கும். அப்புறம் என்ன யோசனை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்களேன்.
சம்மந்தி (Credit - ETVBharat)
  1. குறிப்பு: தேங்காய் எண்ணெய் பிடிக்காதவர்கள் உங்களுக்கு பிடித்த எண்ணெய்யில் செய்யலாம். ஆனால், சம்மந்தியை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
  2. அரைத்து வைத்ததும், உருண்டை பிடிப்பதால் சம்மந்தி காய்ந்து போகாமல் இருக்கும்.

இதையும் படிங்க:

ABOUT THE AUTHOR

...view details