ETV Bharat / lifestyle

முடி கொட்டுறது நிக்கலையா? இதை சுத்தம் செய்யாதது தான் காரணம்! - COMBING MISTAKES

அழுக்கான சீப்பை பயன்படுத்துவது உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Feb 6, 2025, 2:02 PM IST

கூந்தல் பராமரிப்பில் முடி உதிர்வு, பொடுகு தொல்லை, அரிப்பு போன்ற என்ன பிரச்சனைகள் வந்தாலும் அனைவரும் முதலில் உணவுமுறை, ஷாம்பு போன்றவை தான் மாற்ற நினைப்போம். ஆனால், இதற்கெல்லாம் சீப்பும் காரணமாக இருக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?. நீண்ட நாட்களுக்கு கழுவாமல் நாம் பயன்படுத்தும் சீப்பு, உச்சந்தலை ஆரோக்கியத்தை பாதித்து முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதன்படி, அழுக்கான சீப்புகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை சீப்பை மாற்றுவது போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

அழுக்கு படிந்த சீப்பு: பல நாட்களாக, ஏன் பல மாதங்களாக சீப்பை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவர்கள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். இப்படி அழுக்கு படிந்த சீப்பை பயன்படுத்துவது கூந்தலின் இயற்கையான பளபளப்பு தன்மையை நீக்கி வறட்சியை ஏற்படுத்தும். முடியின் நுனிகளில் பிளவு (Split ends) ஏற்படுவதற்கு அழுக்கு சீப்பு முக்கிய காரணமாக இருக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)

தொடர்ந்து அழுக்கான சீப்பை பயன்படுத்துவது உச்சந்தலை ஆரோக்கியத்தை பாதிக்கிறது. உச்சந்தலையில் எரிச்சல், அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளையும் பொடுகு பிரச்சனையை அதிகரித்து ஒட்டுமொத்த சரும பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. சீப்பில் படியும் எண்ணெய், கூந்தல் மற்றும் சருமத்தை பாதித்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளது.

மற்றவர்களின் சீப்பை பயன்படுத்தலாமா?:

  1. பேன் உள்ளவர்களின் சீப்பை நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கும் நிச்சயமாக பேன் பிரச்சனை ஏற்படும்
  2. பொடுகு அல்லது சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது
  3. மற்றவர்களின் சீப்பை பயன்படுத்துவது மற்றும் நமது சீப்பை மற்றவர்கள் பயன்படுத்துவது சுகாதாரமானது இல்லை.

சீப்பு சுத்தம் செய்யும் முறை:

  • அகலமான மற்றும் குறுகிய பற்கள் இருக்கும் சீப்பில் அழுக்குகள் உள் நோக்கி அதிகமாக இருக்கும் என்பதால் சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • அதற்கு, ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, ஷாம்பு கலந்து சீப்பை போட்டு 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து விடுங்கள். பின்னர், பழைய டூத் பிரஷ் பயன்படுத்தி சீப்பு பற்களின் அனைத்து பகுதிகளிலும் நன்கு தேய்க்கவும். இறுதியாக சுத்தமான நீரில் சீப்பை கழுவி நிழலில் காய வையுங்கள்.

எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வது?: வாரத்திற்கு ஒரு முறை சீப்பை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அதுமட்டுமல்லாமல், வீட்டில் சீப்பு வைக்கும் இடத்தில் தூசி படியாமல் இருப்பதை உறுதி செய்யவும். முடிந்தால், சீப்பு வைப்பதற்கு என தனி டப்பா பயன்படுத்துவது சிறந்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)

எப்போது மாற்ற வேண்டும்?: வாரத்திற்கு ஒரு முறை சீப்பை சுத்தம் செய்வது போல, ஆறுமாதங்களுக்கு ஒரு முறை சீப்பை மாற்றிக் கொள்வது அவசியம். சீப்பின் பல் உடைந்தாலோ, சீப்பு அழுத்தமாக தலையில் பதியவில்லை என்றாலோ சீப்பை மாற்றுவது அவசியம். கட்டாயமாக 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டுமா என்றால், இல்லை. நீங்கள் சீப்பை சுத்தமாகவும் சரியாகவும் பயன்படுத்தினால் 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: சுவர் முழுவதும் குழந்தைகளின் கிறுக்கல்களா? டக்குனு சுத்தம் செய்ய 5 சூப்பர் டிப்ஸ் இதோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.