ETV Bharat / lifestyle

காதலர்களே தயாரா இருக்கீங்களா? ப்ராமிஸ் டே - கிஸ் டே வந்தாச்சு! - VALENTINE WEEK SPECIAL DAYS

உங்கள் துணையை, காதலியை, காதலனை கொண்டாட தயாரா இருக்கீங்களா? காதலர் தினத்திற்கு முன்னாள் வரும் ரோஸ் டே முதல் கிஸ் டே வரை எப்படி கொண்டாடுவது என்பதை பார்க்கலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Feb 6, 2025, 4:45 PM IST

காதலர் வார பட்டியல் இதோ..

ரோஸ் டே (Rose Day) - பிப்ரவரி 7: காதல் வாரத்தின் முதல் நாளை, ரோஜாக்கள் வரவேற்கின்றன. நம் மனதிற்கு பிடித்தவர்களுக்கு, அன்புக்குரியவர்களுக்கு பிப்ரவரி 7ம் தேதி ரோஜாவைக் கொடுத்து அன்பை, காதலை வெளிப்படுத்தும் நாள். இது காதலர்களுக்கு மட்டுமா என்றால், இல்லை. நட்பை வெளிப்படுத்த மஞ்சள் ரோஜா, காதலை வெளிப்படுத்த சிவப்பு ரோஜா, சமாதானத்துக்கு வெள்ளை ரோஜா கொடுக்கலாம்.

ப்ரப்போஸ் டே (Propose day) - பிப்ரவரி 8: இந்த நாளில், நீங்கள் காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ப்ரப்போஸ் செய்யலாம். பிப்.8ம் தேதி இதை செய்வதால், நீங்கள் எந்த அளவிற்கு அவர்கள் மீது உணர்ச்சிகளையும், பாசத்தையும் வைத்துள்ளீர்கள் என்பதை உணர்த்தும். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இதை காதலர்கள் மட்டுமல்லாமல், கல்யாணம் செய்தவர்களும் அவர்களது துணைக்கு ப்ரப்போஸ் செய்து நாளை மகிழ்ச்சியாக்குங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

சாக்லேட் டே (Chocolate day) - பிப்ரவரி 9: பொதுவாக, நமக்கு ஒருவரை பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படுத்த சாக்லேட் வாங்கி கொடுப்பது வழக்கம். ஆனால், பிப்.9ம் தேதி உங்கள் துணைக்கு சாக்லேட் வாங்கி கொடுப்பது, சாக்லேட்டை தாண்டி அன்பும் காதலுமாக வெளிப்படும். ஒருவருக்கொருவர் சாக்லேட் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை அறியலாம்.

டெடி டே (Teddy Day) - பிப்ரவரி 10: பிப்ரவரி 10ம் தேதி, பிடித்தவர்களுக்கு டெடி பியர் பொம்மை வாங்கி பரிசளித்து அன்பை வெளிப்படுத்தலாம். இது அவர்களது உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கருதப்படுகிறது. நண்பர்கள், காதலர்கள், உடன் பிறந்தவர்களுக்கும் டெடி பியர் பரிசளிக்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

ப்ராமிஸ் டே (Promise day) பிப்ரவரி 11: காதலர் தின வாரத்தில் இந்த நாளுக்கென்று தனி சிறப்பு இருக்கின்றது. நமக்கு பிடித்தவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடம் உறவின் தன்மையையும், அந்த உறவுக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி, இந்த உறவுக்கான உன்னதத்தை உறுதிப்படுத்துங்கள். இந்த ஒரு நாள் உங்கள் வருடத்தைக்கூட சிறப்பாக மாற்றும் தன்மை கொண்டது.

ஹுக் டே (Hug day) பிப்ரவரி 12: உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமானவர்களிடம் அன்பை வெளிப்படுத்தி அரவணைக்கும் நாள். சின்ன கட்டிப்பிடி வைத்தியம் உங்கள் மற்றும் எதிர் உள்ளவர்களின் மன நிலையை முற்றிலுமாக மாற்றும். இந்த நாள், தொடுதல் மூலம் காதலை எப்படி வெளிப்படுத்தலாம் என்றும் அவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

கிஸ் டே (Kiss day) பிப்ரவரி 13: முத்த தினத்தில் உங்கள் அன்புக்குரியவருக்கு முத்தம் கொடுத்து அவர்களது நாளை சிறப்பாக்குங்கள். காதலர்களுக்குள் அன்புடன் பரிமாறிக்கொள்ளப்படும் விஷயங்களுக்குள் முத்தமும் ஒன்று.

காதலர் தினம் (Valentine's day) பிப்ரவரி 14: ஏழு நாள் கொண்டாட்டத்தின் இறுதி நாள் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்களலால் அதிகம் கொண்டாடப்படும் நாளும் இதுவே. உங்கள் காதலை வெளிப்படுத்த சரியான நாளும் இதுவே. அப்புறம் என்ன அனைவரும் தயாரா? இந்த பரிட்சையில் வென்று வாழ்க்கையை பிரகாசமாக்குங்கள்.

இதையும் படிங்க:

Valentine's Day Date: காதலர் தின டேட்டிங்கிற்கு தயாராக டிப்ஸ்!

காதலும்... காதலர் தினமும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.