பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் இதர பகுதிகளில் பிரசித்தி பெற்ற சுவையான உணவான தால் மக்கானியை, நமது சுவைக்கு ஏற்ப வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். சப்பாத்தி மற்றும் தயிர் சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும் இந்த தால் மக்கானியை ஒரு முறை கண்டிப்பாக செய்து சாப்பிட்டு பாருங்கள்..
தேவையான பொருட்கள்:
- கருப்பு உளுந்து - 1/2 கப்
- கிட்னி பீனிஸ் - 1/4 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி - 3
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- வெண்ணெய் - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தால் மக்கானி செய்முறை:
- குறைந்த பட்சம் 8 மணி நேரம் ஊறவைத்த கருப்பு உளுந்து மற்றும் கிட்னி பீன்ஸை சமைப்பதற்கு முன்பு, தண்ணீரில் நன்கு கழுவி குக்கரில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 6 விசில் விடவும்.
- இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம்,பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்குங்கள்.
- அடுத்ததாக, நறுக்கி வைத்துள்ள தக்காளி, மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும். இப்போது, நாம் முன்னதாக வேக வைத்த கிட்னி பீன்ஸ் மற்றும் உளுந்தை தண்ணீருடன் சேர்த்து வதக்கவும். இறுதியாக உப்பு சேர்த்து, பருப்புகளை நன்கு மசித்து விடவேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்
- பின்னர், 15 நிமிடங்களுக்கு மூடி, இறக்கும் போது வெண்ணெய் சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான தால் மக்கானி ரெடி.