நமது உடல் ஆரோக்கியத்தினை முன்னதாக பிரதிபலிக்கும் பற்கள், நகம், கால் பாதம் ஆகியவற்றை முறையாக எப்படி பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. முகம் பார்ப்பதற்கு பளபளப்பாகவும், அழகாகவும் தெரிய வேண்டும் என பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் நாம், கால் பாதங்களை பராமரிக்க தவறி விடுகிறோம். சுகாதாரம் குறித்த விஷயங்களில் முக்கியமானது கால் பராமரிப்பும், பாதப் பராமரிப்பும். இந்நிலையில், தினசரி சில மாற்றங்களையும், கவனிப்பையும் செலுத்துவதன் மூலம், குழந்தையின் பாதங்களை போல நமது பாதங்களையும் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றலாம்.
- தினசரி குளிக்கும் போது பலரும் செய்யும் முக்கியமான தவறு, பாதங்களை முறையாக சுத்தம் செய்யாதது தான். விரல்களுக்கு இடையிலும், பாதங்களை சுற்றி படிந்துள்ள அழுக்கு, தூசு போன்றவற்றை கவனமாக கழுவ வேண்டும்.
- பாதங்களில் ஈரப்பதத்தை தக்க வைப்பது அவசியம். குளித்த பின்னர், முறையாக மாய்சுரைசர் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி பாதங்கள் வறண்டு போவதில் இருந்து தடுக்க வேண்டும்.
- நகம் வளர்ச்சிக்கு ஏற்றவாறு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நகம் வெட்ட வேண்டும். அனைத்து விரல்களிலும் நகம் சரியான அளவில் இருக்கிறதா என்பதை பார்த்து நகம் வெட்ட வேண்டும்.
- கட்டாயமாக, வாரத்திற்கு ஒரு முறை பாதங்களில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் செய்ய வேண்டும். இறந்த செல்களை அகற்றும் பேக்குகளை போட்டு, 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பின்னர், மறக்காமல் பாதங்களில் மாய்சுரைசர் தடவ வேண்டும்.
- நேரம் கிடைக்கும் போதெல்லாம், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழ சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து பாதங்களை ஊறவைக்கவும். பின்னர், ப்யூமிஸ் கற்களால் லேசாக ஸ்க்ரப் செய்து வர, கால் பொலிவாக இருக்கும்.
- கால் விரல்களில் அவ்வப்போது ஆலிவ் எண்ணெய் பூசி வர, பாதங்கள் மிருதுவாகவும் பட்டுப் போன்றும் இருக்கும். இதனால், பாத வெடிப்பு, கணுக்கால் கருமை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
- நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பாதங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
இதையும் படிங்க:
குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்க: இந்த 5 டிரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க!
குளிர்காலத்தில் ஏற்படும் பாத வெடிப்பை சரி செய்யும் - பாட்டி வைத்தியம்..!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.