ETV Bharat / state

விக்கிரவாண்டியில் சிறுமி உயிரிழந்த சம்பவம்: 'அரசியலாக்க வேண்டாம்' - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் வேண்டுகோள்! - VIKRAVANDI CHILD DEAD ISSUE

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் உள்ள குறைகளை களையவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கண்காணிப்பு குழு அமைப்பது குறித்து அவசர கூட்டம் நடத்த தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

அறிக்கை, உயிரிழந்த சிறுமி
அறிக்கை, உயிரிழந்த சிறுமி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 8:02 AM IST

சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இயங்கிவரும் ஓர் தனியார் மேல்நிலைப் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து, அப்பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் இது குறித்து நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது. அதில், “தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும், பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும், வரும் ஜனவரி 10ஆம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்தை திருச்சியில் நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த அன்புக்குழந்தை, செல்லக்குழந்தை லியா லட்சுமியின் மறைவுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டாவது பெற்றோராக பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், மாணவர்களை பாதுகாப்பது பள்ளியின் கடமையாகும். எத்தனையோ கனவுகளை, லட்சியங்களைக் கொண்டுள்ள அன்புக் குழந்தை லியா லட்சுமியின் பெற்றோரை என்ன சொல்லி ஆற்றுப்படுத்துவது என தெரியாமல் தவிக்கிறோம்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டியில் எல்கேஜி சிறுமி உயிரிழப்பு.. ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு!

இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகள் தங்கள் உட்கட்டமைப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், வாகனங்களில் குழந்தைகள் ஏறும்போதும் இறங்கும்போதும் உதவியாளர்கள் பக்க பலமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறு துன்பம் கூட ஏற்படாத அளவிற்கு தாயின் கருணையோடும், தந்தையின் அக்கறையோடும் பள்ளி நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என்றும் பள்ளித் தாளாளர்களைத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இரங்கல் அறிக்கை
இரங்கல் அறிக்கை (tamil nadu private schools association)

தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளை ஓர் உயர்மட்டக் குழு அமைத்து பள்ளிகளின் பாதுகாப்பு ஏற்பாட்டை கண்காணித்து பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கி குறைகள் இருந்தால் உடனே அதைக் களைய நடவடிக்கை எடுப்பதே குழுவின் நோக்கம்.

பாதுகாப்பு கண்காணிப்புக் குழு அமைப்பதற்கான அவசர ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் பாதுகாப்பது தான் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலையாய பணி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அன்போடு அரசியல் தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.