விண்வெளியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, விண்வெளியில் தாவர வளர்ப்பு சோதனை முயற்சியில் சாதனை படைத்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
வருங்காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு, விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முயற்சியையும், விண்வெளியில் வேளாண் செய்யமுடியுமா? என்பதை ஆராயும் வகையில், இஸ்ரோ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர் 30ம் தேதி, அந்திராவின் ஸ்ரீஹரிகோட்டவில் இருந்து 'பி.எஸ்.எல்.வி சி-60' (PSLV C-60) ராக்கெட்டில் 24 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.
Life sprouts in space! 🌱 VSSC's CROPS (Compact Research Module for Orbital Plant Studies) experiment onboard PSLV-C60 POEM-4 successfully sprouted cowpea seeds in 4 days. Leaves expected soon. #ISRO #BiologyInSpace pic.twitter.com/QG7LU7LcRR
— ISRO (@isro) January 4, 2025
இந்த 24 செயற்கைக்கோள்களில், CROPS எனப்படும் விஎஸ்எஸ்சி துணை செயற்கை கோளில், நுண் புவியீர்ப்புச் சூழலில் பிரத்யேக பெட்டகத்தில் (POEM 4) 8 காராமணி விதைகள் வைத்து அனுப்பப்பட்டது. விதையின் வளர்ச்சியை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எட்டு காராமணி விதையில், ஒரு காராமணி விதை முளைவிட்டிருப்பதாக, இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
"விண்வெளியில் வாழ்வு துளிர்க்கிறது! PSLV-C60 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட POEM-4 பெட்டகத்தில் வைத்திருந்த காராமணி விதைகள் (cowpea seeds) 4 நாட்களிலே முளைவிட்டுள்ளது. விரைவில் இலைகள் துளிர் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரோ புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
PSLV-C60/SpaDeX Mission Update:
— ISRO (@isro) December 26, 2024
📷 Integration Milestone! SpaDeX satellites have been successfully integrated with PSLV-C60 at SDSC SHAR. A step closer to liftoff!
Stay tuned for more updates.#ISRO #SpaDeX pic.twitter.com/AjMc12QIux
விண்வெளியில் தாவரம் வளர்ப்புக்கான பரிசோதனை முயற்சியாக, மைக்ரோ புவியீர்ப்பு நிலையில் தாவரங்கள் வளருவதை பரிசோதிக்க இஸ்ரோ இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. பூமிக்கு மேல் 350 கி.மீ மேல் சுற்றி வரும் இந்த செயற்கை கோளில் உள்ள இந்த போயம் 4 பெட்டகத்தில், கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காராமணி தேர்வு செய்யப்பட்டது ஏன்?: விண்வெளி சூழலில் வளர்வதற்கு ஏற்ப குறுகிய கால பயிர்களை வைத்து பூமியில் சோதனை நடத்தப்பட்டது. இதில், விதை வளரும் தன்மை மற்றும் விண்வெளி சூழலில் வளர்வதற்கு ஏற்ற பயிராக காராமணி தேர்வு செய்யப்பட்டது.
இதையும் படிங்க:
கடலின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் கனிமத் தங்கம் - சாதித்து காட்டிய NIOT ஆய்வாளர்கள்!
HMPV வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்..பொது சுகாதார இயக்குநரகம் கொடுத்த நல்ல செய்தி!