தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

துவங்கியது சீத்தாப்பழ சீசன்... சீதாப்பழ ஐஸ்கிரீம் செய்து பாருங்க! - CUSTARD APPLE Ice Cream - CUSTARD APPLE ICE CREAM

தற்போது சீத்தாப்பழ சீசன் துவங்கி உள்ள நிலையில், சீத்தாப்பழத்தை வைத்து சுவையான ஐஸ்கிரீம் எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

சீத்தாப்பழம், ஐஸ்கீரிம் கோப்பு படம்
சீத்தாப்பழம், ஐஸ்கீரிம் கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2024, 3:30 PM IST

சென்னை: தற்போது சீதாப்பழ சீசன் தொடங்கி உள்ளதை அடுத்து, சாலையோர கடைகள் முதல் சூப்பர் மார்கெட் வரை சீதாப்பழ விற்பனை களைக்கட்ட துவங்கி உள்ளது. குளிர்காலத்தில் மட்டும் கிடைக்கும் சீசன் பழமான சீதாப்பழத்தில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளன. சீத்தாப்பழத்தில் விட்டமின் சி, பி6, இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், புரதச்சத்து, பொட்டாசியம், சோடியம், நார்ச்சத்து, மாவுச்சத்து உள்ளிட்டவை உள்ளன.

இருப்பினும் சிலர் சீதாப்பழத்தை விரும்புவதில்லை. அவர்களுக்கு சீதாப்பழத்தை கொண்டு அவர்கள் விரும்பும் வகையில் சீதாப்பழ ஐஸ்கிரீம், புட்டிங், மில்க் ஷேக், பாயசம் உள்ளிட்ட சூப்பர் ரெசிபிகளை செய்து கொடுக்கலாம். இப்போது சுவையாக திகட்டாத சீதாப்பழ ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சீத்தாப்பழம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:தோல் புற்றுநோயை தடுக்கும் சீதாப்பழம்..! அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

தேவையான பொருட்கள்:

சீத்தாப்பழம் - 4 எண்ணிக்கை

பால் - 750 மில்லி லிட்டர்

ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்

சர்க்கரை - 150 கிராம்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 3/4 லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி, அதில் 1/4 ஸ்பூன் அளவு ஏலக்காய் பொடியை சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் பாதியளவு வற்றிய பின், அடுப்பை அணைத்து விட்டு பாலை நன்றாக ஆற விட வேண்டும்.

4 சீதாப்பழத்தில் உள்ள சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து, அதனுடன் 150 கிராம் சர்க்கரை சேர்த்து மிக்ஸில் கூழாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஆறிய பாலை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி, ப்ரீசரில் வைக்க வேண்டும். 2 மணி நேரம் ப்ரீட்ஜில் அப்படியே வைக்க வேண்டும்.

சீத்தாப்பழம் (Credits - ETV Bharat Tamil Nadu)

2 மணி கழித்து அந்த கலவையை மீண்டும் மிக்ஸில் போட்டு அரைத்து, பார்த்தால் தயார் செய்து சுவையான சீத்தாப்பழ ஹோம் மேட் ஐஸ்கிரீம் தயார்.

(சீதாப்பழத்தில் உள்ள கூடுதலானா ஆரோக்கிய நன்மைகள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் எனில், ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கட்டுரையின் லிங்க் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சென்று படித்துப் பயன் பெறவும்.)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details