ETV Bharat / lifestyle

பழங்களில் எதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது? அதிலுள்ள எண்கள் குறிப்பது என்ன? - STICKERS ON FRUITS

பழங்களில் ஒட்டப்படிருக்கும் ஸ்டிக்கரை பகுப்பாய்வு செய்வதன் மூலம், அது இயற்கையாக விளைய வைக்கப்பட்டுள்ளதா? மரபணு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை கண்டறியலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : 15 hours ago

சந்தையில் விற்பனை செய்யப்படும் பழங்களில், குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் பெரும்பாலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அது எதற்காக என நீங்கள் நினைத்தது உண்டா? ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அப்பிள் தரமானது எனவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது எனவும் அதனால் தான் அவற்றின் விலை அதிகமாக இருக்கிறது என பலரும் நினைத்திருப்போம்.

அதை போன்று, பளபளப்பாக இருக்கும் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை பலரும் வாங்கி செல்வார்கள். ஆனால், உண்மையில் எதற்காக இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது? எதை குறிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

பழங்களில் ஒட்டப்படும் இந்த ஸ்டிக்கர் உண்மையில், விலையுடனோ, தரத்துடனோ தொடர்புடையது கிடையாது என்றால் நம்ப முடிகிறதா? இது ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளது. ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களை பொருத்து, இந்த பழங்கள், இயற்கை முறையில் விளைந்ததா, பூச்சுக்கொல்லி மருந்துகளால் பயிரிடப்பட்டதா, மரபணு மாற்றம் செய்யப்பட்டதா? என்பதை கண்டறியலாம்.

எண்கள் சொல்வது என்ன?: ஆப்பிள் பழங்களில் பெரும்பாலும், 4 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும். உதாரணத்திற்கு, 4126, 4839 போன்ற எண்கள் ஆப்பிளில் இருந்தால் அவை, பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்டிருக்கும். இந்த வரிசை எண்கள் கொண்ட பழங்கள் விளையும் போது, நோய் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க பூச்சுக்கொல்லி அதிகம் பயன்படுத்திருப்பார்கள். இதனால், பழங்களை நன்கு கழுவி சாப்பிட வேண்டும்.

இதையும் படிங்க: சூரிய நமஸ்காரத்தில் இவ்வளவு நன்மைகளா? தினசரி 3 முறை செய்தால் போதும்!

சந்தையில் கிடைக்கும் அனைத்து பழங்களும் இயற்கையானவை கிடையாது. சில பழங்கள், மரபணு மாற்றம் மூலம் உருவாக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், அவை மற்ற பழங்களை விட சற்று விலை அதிகமாகவும் இருக்கும். 5 இலக்கு எண்களை கொண்டு, 8ம் எண்ணில் தொடங்கும் எண் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. உதரணத்திற்கு 84569, 81742 போன்ற வரிசையை கொண்டிருக்கும்.

9 என தொடங்கும் எண்களுடன் இருக்கும் ஆப்பிள்கள் இயற்கை முறையில் விளைந்தவையாக இருக்கும். பழங்களின் விளைச்சலுக்கு பூச்சிக்கொல்லியோ, ரசாயன உரங்களோ பயன்படுத்தப்படாமல் இருக்கும். இந்நிலையில், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்கள் வாங்கும் போது, கவனமாக வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது இவ்வளவு ஈஸியா? பெற்றோர்களே இது உங்களுக்கு தான்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.