ETV Bharat / state

'பொங்கல் தொகுப்புடன் 2,000 ரூபாய் வழங்க வேண்டும்' - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு..! - PONGAL CASH

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் இலவச தொகுப்புடன் சேர்த்து 2,000 ரூபாய் நிதி உதவி வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், பணம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம், பணம் கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 6:12 PM IST

சென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வழக்கமாக வழங்கப்படும் ரொக்கம் இடம்பெறவில்லை. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியும், கோரிக்கை வைத்தும் வருகின்றனர். குறிப்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், பொங்கல் பரிசாக 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் இலவச தொகுப்புடன் சேர்த்து 2,000 ரூபாய் நிதி உதவி வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மோகன் தாஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், '' கடந்த 2009-2024ம் ஆண்டு வரை தமிழர்கள் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச தொகுப்புடன் சேர்த்து பணமும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பில் 3,000 ரூபாய் வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் வலியுறுத்தல்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இலவச தொகுப்பு வழங்கும் திட்டத்தை 2009ல் தொடங்கி 2011 வரை வழங்கினார். பின்னர், ஆட்சி மாற்றத்திற்கு பின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2013ல் 100 ரூபாய் பணமும் சேர்த்து வழங்கினார்.

தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி 2019ல் இலவச தொகுப்புடன் 1,000 ரூபாயும், கரோனா காலத்தில் 2,500 ரூபாயும் வழங்கினார். பின்னர், 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், 2 கோடியே 19 லட்சம் பயனாளர்களுக்கு 2,429 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

இந்நிலையில், 2025ம் ஆண்டு நிதி பற்றாக்குறை காரணமாக நிதி உதவி வழங்க முடியாது என அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி வழங்குவது பேருதவியாக இருக்கும். அதனால், இந்த பொங்கல் பண்டிகைக்கு இலவச தொகுப்புடன் சேர்ந்து 2,000 ரூபாய் நிதி உதவி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.