ETV Bharat / state

அண்ணா பல்கலை சம்பவம்; 'பாதிக்கப்பட்ட மாணவி அப்படி சொல்லவே இல்லை'.. காவல்துறை அதிரடி அறிவிப்பு..! - ANNA UNIVERSITY STUDENT CASE

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு குறித்து வெளியான பல்வேறு திடுக்கிடும் தகவல்களுக்கு தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலை, தமிழ்நாடு காவல்துறை (கோப்புப்படம்)
அண்ணா பல்கலை, தமிழ்நாடு காவல்துறை (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 8:39 PM IST

சென்னை: சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவின் பெயரில், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு மற்றும் இந்த வழக்கு குறித்தான முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (ஜன.4) இந்த வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு இயந்திரம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் வெளியான முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த 'யார் அந்த சார்' என்ற நபர் திருப்பூரைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் சமூக ஊடகங்களிலும் சில செய்தி ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இந்த அனைத்து தகவல்களும் ஆதாரமற்றவை என தமிழ்நாடு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில், ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்ததாகவும், ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், திருப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் போன்ற ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: லீக்கான மாணவி எஃப்ஐஆர்.. கண்காணிப்பில் 14 பேர்.. இரண்டு சேனல்கள் மீது வழக்கு பதிவு..!

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்தப்படும் விசாரணைகள் குறித்து எந்த ஒரு அறிக்கையோ, கருத்தோ எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரியப்படுத்தவில்லை என தெரிவித்துக் கொள்கிறோம். எனவே சமூக ஊடகங்கள், செய்தி ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை ஆகும்.

இது போன்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் தகவல்கள் பரப்பப்படுவதால் பொதுமக்களிடையே இந்த வழக்கு குறித்து குழப்பம் ஏற்படுவதாகவும், சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை பாதிப்படைவதாக தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த வழக்கின் தீவிரத் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஊடகங்கள், தனி நபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் தவறான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், தொடர்ந்து இது போன்ற தவறான தகவல்களை பரப்புவதால் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்துவதுடன் புலன் விசாரணையில் நன்பகதன்மையும் பாதிக்கப்படும். என காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.