தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'நானும், எலான் மஸ்க்கும் வீழ்ச்சியடைந்து வரும் இந்த நாட்டை காப்பாற்ற போகிறோம்' - விவேக் ராமசாமி சூளுரை - VIVEK RAMASWAMY

எலான் மஸ்க்கும், நானும் வீழ்ச்சியடைந்து வரும் இந்த நாட்டை காப்பாற்ற போகிறோம் என்று அமெரிக்க அரசாங்க சிறப்புத் திறன் துறை தலைவர் விவேக் ராமசாமி கூறினார்.

எலான் மஸ்க், விவேக் ராமசாமி
எலான் மஸ்க், விவேக் ராமசாமி (Credit - AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2024, 3:55 PM IST

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய அரசாங்க சிறப்புத் திறன் துறையை உருவாக்கி, அதன் தலைவர்களாக எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமியை நியமித்துள்ளார். இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்விகமாக கொண்டவர் விவேக் ராமசாமி. அதிபர் ட்ரம்ப் தனது அமைச்சரவையில் இவருக்கு முக்கிய பொறுப்பை கொடுத்து சிறப்பித்துள்ளார். அரசாங்கத் துறைகளை சீரமைப்பது, தேவையற்ற செலவுகளை குறைப்பது உள்ளிட்ட நிர்வாக சார்ந்த கட்டமைப்பை விவேக் ராமசாமி மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இருவரும் சேர்ந்து கவனிக்க உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த வியாழன் அன்று புளோரிடாவில் உள்ள மார்-எ-லாகோவில் நடந்த நிகழ்ச்சியில் விவேக் ராமசாமி உரையாற்றிய போது, ''எங்கள் நிறுவனர்கள் பெருமைப்படும் அளவுக்கு நல்ல அரசாங்கத்தை உருவாக்குவதே எங்களது வேலை' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விவேக் ராமசாமி, '' எலான் மஸ்க்கும், நானும் வீழ்ச்சியடைந்து வரும் இந்த நாட்டை காப்பாற்ற போகிறோம். எலான் மஸ்க்கை நீங்கள் எது வரையில் அறிந்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. அவர் இங்கு 'உளியை' கொண்டு வரவில்லை. அதற்கு மாறாக பெரிய 'வாளை' கொண்டு வந்திருக்கிறார். நாங்கள் அதை அந்த அதிகாரத்துவத்திற்கு கொண்டு செல்லப் போகிறோம். இது மிகவும் வேடிக்கையாக இருக்கும்'' என்றார்.

இதையும் படிங்க:இலங்கை நாடாளுமன்ற தேர்தல்; வரலாற்று வெற்றியை பெற்ற என்பிபி கூட்டணி..!

மேலும், '' நாங்கள் வீழ்ச்சியடைந்து வரும் ஒரு தேசமாக மாறிவிட்டோம். கடந்த நான்கு ஆன்டுகளாக நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். சரிந்து வரும் தேசமாக நாம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அமெரிக்காவில் காலை பொழுதாக போகிறது. இது ஒரு புதிய விடியலின் தொடக்கம். அப்படியென்றால், நீங்கள் முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் உங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள். உங்கள் மனதில் உள்ளதை பேச நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள். ஒரு சிறந்த நபர் அவரது நிறத்தை பொருட்படுத்தாமல் வேலையை பெறுவார். அரசாங்கத்தின் அளவைக் குறைப்பதும், பொதுமக்களுடன் முடிந்தவரை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதும்தான் எங்கள் இலக்கு,'' என்று ராமசாமி கூறினார்.

இதற்கிடையே, எலன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரும் அரசு திறன் துறையின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு வாரமும் நேரடி ஒளிபரப்பின் வாயிலாக உரையாற்ற போவதாகவும் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details