கொழும்பு:இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். ஆனால் நாடாளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்ததால் ஆட்சி அமைக்க பெரும்பான்மை தேவைப்பட்டது.
இதனால், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மொத்தம் 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்திற்கு கடந்த 14 ஆம் தேதி தேர்தல் நடந்தது. வாக்குகள் விரைவாக எண்ணப்பட்டு நேற்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பொறுத்தவரை, 196 உறுப்பினர்கள் மக்களாலும், மீதியுள்ள 29 பேர் வாக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், 18 எம்பி-க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதையும் படிங்க:ராணுவ அமைச்சர் முதல் சிஐஏ இயக்குநர் வரை.. ட்ரம்ப் டிக் செய்த நபர்கள் யார் யார்..?
அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலில் 62 சதவீத வாக்குகளை பெற்ற அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி, 141 இடங்களில் நேரடியாக வெற்றி பெற்றது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கூடுதலாக 18 இடங்கள் கிடைத்து 159 இடங்களை மக்கள் சக்தி கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதனால் என்பிபி கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பாண்மையுடன் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.
எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) மக்கள் வாக்குகள் மூலம் 35 இடங்களைப் பெற்றது. வாக்கு சதவீதம் அடிப்படையில் 5 இடங்கள் கிடைக்கப்பெற்று ஒட்டுமொத்தமாக 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. , முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணி 5, இலங்கை தமிழ் அரசு கட்சி 8 இடங்கள், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சி 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்