டோக்கியோ: விண்வெளி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ள ஜப்பான், தனது லேண்டரை முதல் முறையாக விண்வெளியில் தரையிறக்கத் திட்டமிட்டு உள்ளது. ஜப்பானின் லேண்டர் நாளை (ஜன. 19) சனிக்கிழமை காலை விண்வெளியில் தரையிறக்க அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜப்பான் அனுப்பிய விண்கலம் நிலவில் மோதி விழுந்து நொறுங்கியது. நிலவில் தரையிறங்கிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சோவியத் யூனியன், இந்தியா மற்றும் சீனாவைத் தொடர்ந்து 5வது நாடாக மாற ஜப்பான் முயற்சித்து வருகிறது.
திட்டமிட்டபடி ஜப்பானின் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் பட்சத்தில் சர்வதேச அறிவியல், ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை, உள்நாட்டு அரசியலில் சாத்தியமாகும் ஆதாயங்கள் என பல திட்டங்களை ஜப்பான் அடையும். அதேநேரம் திட்டம் தோல்வியில் முடியும் பட்சத்தில் அதிகளவிலான பொருட்செலவு மற்றும் பொது மக்களின் சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும்.
அண்மையில் ரஷ்யா தனது லுனார் 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாகத் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. அதேநேரம் கடந்த ஆண்டு இந்தியா தனது சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இருந்தது. நிலவில் ஜப்பானின் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்குமா என ஒட்டுமொத்த உலகமே எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
இதையும் படிங்க:அயோத்தி ராமர் கோயில் திறப்பு - அமெரிக்காவில் ராட்சத பில்போர்டுகள் மூலம் விளம்பரம்!