ETV Bharat / international

ஓஹியோ ஆளுநர் பதவிக்கு போட்டியிட விவேக் ராமசாமி முடிவு - VIVEK RAMASWAMY

தொழில்துறையில் இருந்து அரசியலில் அடியெடுத்து வைத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்காவின் ஓஹியோ ஆளுநர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவேக் ராமசாமி - கோப்புப்படம்
விவேக் ராமசாமி - கோப்புப்படம் (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2025, 12:56 PM IST

வாஷிங்டன்: இந்திய அமெரிக்க தொழிலதிபர் என்ற அந்தஸ்தில் இருந்து அரசியல்வாதியாக அடியெடுத்து வைத்த விவேக் ராமசாமி, ஓஹியோ ஆளுநர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்வுக்கான தேர்தலில் தோல்வியடைந்தவர் விவேக் ராமசாமி. தற்போது 39 வயதாகும் விவேக் ராமசாமி, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மிக நெருங்கிய நம்பிக்கைக்குரியவர். டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க்குடன் சேர்ந்து, நிர்வாகத்தை சீர்திருத்தும் பணியை டிரம்ப் அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

அமெரிக்காவின் சின்சினாட்டியில் இந்திய பெற்றோருக்கு மகனாக பிறந்த விவேக் ராமசாமி, ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர். விவேக் ராமசாமி, ஓஹியோ ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் தனது முடிவை விரைவில் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

"தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமியின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. புதிய அதிபர் ட்ரம்ப்பின் முயற்சியான DOGE என அழைக்கப்படும் Department of Government Efficiency துறையை வெற்றிகரமாக செயல்படுத்துவதும், ஆளுநர் பதவிக்கு போட்டியிடுவதும் தான் விவேக் ராமசாயின் தற்போதைய திட்டம் " என்று அவரின் மனநிலையை நன்கு அறிந்த, பெயர் குறிப்பிட விரும்பாத அவரது நண்பர், தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.

"ஓஹியோ ஆளுநர் பதவிக்கு போட்டியிடுவதை தெரிவிக்கும் அறிக்கையின் வரைவு தயாராக உள்ளது. அது எந்த நேரத்திலும் வெளியாகலாம்" என்று விவேக் ராமசாமி தங்களிடம் கூறியதாக அந்த நபர் தெரிவித்தார். ஓஹியோ ஆளுநருக்கான தேர்தல் நவம்பர் 2026-ல் நடைபெறவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.