தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கேட்ஸ் அறக்கட்டளையில் இருந்து விலகினார் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி! - MELINDA EXITS FROM GATES FOUNDATION

Bill gates ex wife Resigns from Gates Foundation: பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தம்பதியினர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றுப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து விலகுவதாக மெலிண்டா கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

bill gates and his EX Wife melinda gates photo
bill gates and his EX Wife melinda gates photo (Credits - IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 4:09 PM IST

லண்டன்:பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தனது பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகின் டாப் பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் 1994ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பில் கேட்ஸ் பல தொண்டு நிறுவனங்களை நடத்தி வரும் நிலையில், 2000ஆம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இணைத்து அறக்கட்டளை தொடங்கினர். லாப நோக்கு இல்லாமல் இயங்கும் பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை (Bill And Mellinda Foundation) கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றது.

இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். அப்போது, அறக்கட்டளை நிலை என்னவாகும் என கேள்வி எழுந்த நிலையில், மெலிண்டா இணைத் தலைவராகத் தொடர்வார் என அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மெலிண்டா தனது எக்ஸ் தளத்தில் அறக்கட்டளையிலிருந்து தானாக விலகியுள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.

அதில், "பில் கேட்ஸ் மற்றும் நான் இணைந்து உருவாக்கிய இந்த அறக்கட்டளையை நினைத்து பெருமை கொள்கிறேன். உலக எங்கிலும் உள்ள ஏற்றத் தாழ்வுகளை மாற்றும் முயற்சியில் அறக்கட்டளை சிறப்பாகச் செய்து வருகிறது. தனக்கு கேட்ஸ் அறக்கட்டளையில் ஜூன் 7ம் தேதி கடைசி நாள் என தெரிவித்த அவர், இது சுலபமான முடிவு இல்லை" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மெலிண்டா இந்த அறக்கட்டளையிலிருந்து விலகி சொந்த தொண்டு பணிகளைத் தொடரப் போவதால் 12 பில்லியன் டாலர் பணத்தைப் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிதியை கேட்ஸ் தனிப்பட்ட முறையில் வழங்குவார் என்றும் அறக்கட்டளையின் நன்கொடையிலிருந்து இல்லை எனவும் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காஸாவில் இந்தியர் கொலை! ஐநா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த கொடூரம்! - Israel Gaza Conflict

ABOUT THE AUTHOR

...view details