ETV Bharat / international

ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான நபர் 116ஆவது வயதில் காலமானார்! - WORLD OLDEST PERSON

உலகின் மிக அதிக வயதான ஜப்பானை சேர்ந்த டோமிகோ இடூகா என்ற பெண்மணி தமது 116ஆவது வயதில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி காலமானார்.

டோமிகோ இடூகாவின் 116ஆவது பிறந்த நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
டோமிகோ இடூகாவின் 116ஆவது பிறந்த நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் (Image credits-AFP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 5:00 PM IST

டோக்கியோ: உலகின் மிக அதிக வயதான ஜப்பானை சேர்ந்த டோமிகோ இடூகா என்ற பெண்மணி தமது 116ஆவது வயதில் காலமானார். அவர் காலமானது குறித்து அவர் வசித்து வந்த ஆஷியா நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

டோமிகோ இடூகாவுக்கு நான்கு குழந்தைகள், 5 பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர் முதுமை காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஆஷியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தங்கி இருந்தார். இதனை அந்த நகரின் மேயர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் வணிக நகரான ஒசாகாவில் 1908ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி டோமிகோ இடூகா பிறந்தார். அவர் பிறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்காவில் போர்டு மாடல் T என்ற கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு முன்பு உலகின் அதிக வயதான நபராக இருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மரியா பிரானியாஸ் தமது 117ஆவது வயதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானதைத் தொடர்ந்து இவர் உலகின் மிகவும் வயதானவர் என்று அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: 6 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

"நீண்டகால வாழ்க்கையின் மூலம் டோமிகோ இடூகா ஊக்கத்தையும் நம்பிக்கையும் அளித்தார். இதற்காக அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்," என ஆஷியா நகர மேயர் 27 வயதான ரியோசுகே தகாஷிமா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மூன்று சகோதர, சகோதரிகளுடன் பிறந்த டோமிகோ இடூகா, தமது வாழ்நாளில் உலகப்போர்கள், பெருந்தொற்றுகள், தொழிலநுட்ப மாற்றங்கள் ஆகியவற்றை கண்டிருக்கிறார். அவர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் கைப்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். வயது முதுமையின்போது வாழைப்பழங்கள், கல்பி எனும் வெண்மையான பானம் ஆகியவற்றை விரும்பி உண்டார் என மேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பானில் பொதுவாக பெண்கள் நீண்டகாலம் வாழ்பவர்களாக உள்ளனர். ஆனால், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவ மற்றும் நலன்புரி செலவுகள் அதிகரித்து வருகிறது. எனவே, ஜப்பான் மோசமான மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

கடந்த செப்டம்பர் நிலவரப்படி அந்த நாட்டின் 95000 பேர் 100 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதினராக உள்ளனர். இதில் 88 சதவிகித த்தினர் பெண்கள் ஆவர். நாட்டின் 124 மில்லியன் மககள் தொகையில் 3 பங்கு மக்கள் 65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினர் ஆவர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.