சென்னை:ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 6 ஆம் தேதி உலக பெருமூளை வாதம் தினம் (World Cerebral Palsy Day) கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று உலக பெருமூளை வாதம் தினம் அனுசரிக்கப்படுகிறது. பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனுபவிக்கும் சவால்களை கவனத்தில் கொண்டு, சமூகத்தில் அவர்களுக்கும் சம உரிமைகள், வாய்ப்புகள் உருவாக்கிடும் நோக்கில் கடந்த 2012இல் உலக பெருமூளை வாதம் தினம் நிறுவப்பட்டது.
பெருமூளை வாதம்: பெருமூளை வாதம் (Cerebral Palsy) என்பது உடல் இயக்கம், தசை அசைவை பாதிக்கும் கோளாறாகும். குழந்தை பிறப்பதற்கு முன் மூளையில் ஏற்படும் காயத்தால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. புதிதாக பிறக்கும் 345 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவில் சுமார் 1 மில்லியன் பேரும், உலகளவில் 18 மில்லியன் பேரும் பெருமூளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமூளை வாதம் நோயின் அறிகுறிகள்:
பெருமூளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தசை அதிக விறைப்பாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருக்கும்.
உட்காருவது, நடப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை செய்வதற்கு தாமதமாகலாம். தலையை தாங்கும் திறன் இருக்காது.
நடுக்கம் இருக்கும்.
பார்வை குறைபாடுகள், கேட்பதில் பிரச்சினை ஆகியவை இருக்கலாம்.
இதையும் படிங்க:அல்சைமர் நோய்க்கு இயற்கை முறையில் சிகிச்சை - ஆய்வு கூறுவது என்ன? - Remedies for Alzheimer Disease
பெருமூளை வாதத்தின் வகைகள்:பெருமூளை வாதம் நான்கு வகைப்படும்.
ஸ்பாஸ்டிக் பெருமூளை வாதம் (Spastic Cerebral Palsy): இவ்வகையான பாதிப்பில் தசைப்பிடிப்பு ஏற்படும்.