ETV Bharat / health

தமிழகத்தில் அதிகரித்து வரும் 'Scrub Typhus' தொற்று..யாருக்கெல்லாம் பாதிப்பு? தடுப்பது எப்படி? மருத்துவர் விளக்கம்! - SCRUB TYPHUS OUTBREAK

'ஸ்க்ரப் டைபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாக, பொது சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தொற்று யாரை பாதிக்கும்? அதன் அறிகுறிகள் என்னென்ன? எவ்வாறு தடுக்கலாம்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 2, 2025, 11:07 AM IST

Updated : 13 hours ago

தமிழகத்தில் 'ஸ்கரப் டைபஸ்' (Scrub Typhus) என்ற பாக்டீரியாவின் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பருவமழை காலங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவது இயல்பான நிலையில், இந்த முறை தமிழகத்தில் பாக்டீரியா தொற்று உருவாகியுள்ளது. 'ஸ்க்ரப் டைபஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொற்று, ரிக்கட்சியா (Rickettsiae) எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.

தொற்று பரவல் உள்ள மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அதிக அளவில் பரவல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இந்த பாதிப்பு காணப்படுகிறது.

மருத்துவர் லோகவெங்கடேஷ் பேட்டி (Credit - ETVBharat Tamil Nadu)

விவசாயிகள், புதர்மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அறிகுறியும், சிகிச்சையும்?: ஸ்கரப் டைபஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு,

  • காய்ச்சல்
  • தலைவலி
  • உடல் சோர்வு
  • தடிப்புகள் மற்றும் உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. 5 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருப்பவர்களுக்கு இந்த தொற்று அபயாம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அசித்ரோமைசின், டாக்சிசைக்ளின் ஆகிய நோய் எதிர்ப்பு மருந்துகளை அளித்து சிகிச்சையளிக்க வேண்டும். முறையான சிகிச்சை மூலம் 1 முதல் 2 வாரங்களில் முழுமையாக குணமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் எச்சரிக்கை: ஸ்கர்ப் டைபஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் போலவே அறிகுறிகள் இருக்கும் என கூறும் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் லோகவெங்கடேஷ், இவற்றை கண்டுக்கொள்ளாமல் விட்டால் சிறுநீரக செயலிழப்பு, நுரையீரல் தொற்று, இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஏற்படும் என எச்சரிக்கிறார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - TN HEALTH DEPARTMENT)

நோய் தொற்று கண்டறியும் பரிசோதனை: ஐஜிஎம் ஸ்கர்ப் டைபஸ் (IgM Scrub Typhus), எலிசா பரிசோதனை (ELISA) போன்ற சோதனைகள் மூலம் ஸ்கர்ப் டைபஸ் தொற்றுகளை கண்டறியலாம் என்கிறார் மருத்துவர் லோகவெங்கடேஷ்.

தண்ணீர் குடிக்காமல், சிறுநீர் கழிக்காமல், வாந்தி, அதீத தலைவலி, மலத்தில் இரத்தம் போன்ற பிரச்சனைகளை குழந்தைகள் எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு காய்ச்சல் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார் மருத்துவர்.

தடுப்பது எப்படி?: வருமுன் காப்பதே சிறந்தது என்பதை போல, இந்த தொற்றுக்கு தடுப்பூசி இல்லாததால், நோய் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டிராம்பிகுலிட் மைட் (Trombiculid mite) எனப்படும் ரசாயனம் கலந்திருக்கும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும். இது பொதுவாகவே, கொசுவத்தி சுருள், ஸ்ப்ரே போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. செடிகள் இருக்கும் இடத்தில் இந்த பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதன் மூலம் தொற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க:

வீகன் உணவு முறை பின்பற்றுபவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு..ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தொண்டையில் 'கிச் கிச்'? இந்த 5 பொருட்கள் வீட்டில் இருந்தால் உடனடி நிவாரணம்!

Last Updated : 13 hours ago
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.