புற்றுநோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயாளிகளுக்கு ஆதரவு அளிப்பதோடு, புற்றுநோய் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் வண்ண ரிப்பன்கள் (Ribbon) அடையாளமாக பயன்படுத்தப்படுகின்றன.
புற்றுநோய் விழிப்புணர்வில் 'வண்ணமயமான ரிப்பன்கள்'..ஒவ்வொன்றும் குறிப்பது என்ன? - CANCER RIBBON COLORS MEANING
ஒவ்வொரு வகையான புற்றுநோய்க்கும் ஒவ்வொரு வண்ண ரிப்பன் பயன்படுத்தப்படுகிறது. அவை குறிப்பது என்ன? ரிப்பன் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கோப்புப்படம் (Credit - Pexels)
Published : Feb 4, 2025, 11:01 AM IST
1990ம் ஆண்டு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சிவப்பு ரிப்பன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரிப்பன் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு புற்றுநோய்க்கும் தனித்தனி பட்டை ஒதுக்கப்பட்டுள்ளது என தேசிய புற்றுநோய் நிறுவனம் (National Cancer Institute) தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு வகையான புற்றுநோய்க்கும் எந்த வண்ண ரிப்பன் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்...
வரிசை எண் | புற்றுநோய் வகை | நிறம் | அனுசரிக்கப்படும் மாதம் |
1 | மார்பகப் புற்றுநோய் | இளஞ்சிவப்பு (பிங்க்) | அக்டோபர் |
2 | நுரையீரல் புற்றுநோய் | வெள்ளை | நவம்பர் |
3 | கருப்பை புற்றுநோய் (Ovarian cancer ) | டீல் நீலம் (Teal Blue) | செப்டம்பர் |
4 | எலும்பு புற்றுநோய் | மஞ்சள் | ஜூலை |
5 | தோல் புற்றுநோய் | கருப்பு | மே |
6 | லுகேமியா | ஆரஞ்சு | செப்டம்பர் |
7 | தைராய்டு புற்றுநோய் | நீலம், இளஞ்சிவப்பு, டீல் நீலம் | செப்டம்பர் |
8 | கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer) | நீலம் மற்றும் வெள்ளை | ஜனவரி |
9 | மூளை புற்றுநோய் | சாம்பல் | மே |
10 | கல்லீரல் புற்றுநோய் | பச்சை | அக்டோபர் |
11 | பெருங்குடல் புற்றுநோய் | அடர் நிலம் | மார்ச் |