ETV Bharat / health

நீங்கள் அதிகமாக உப்பு சாப்பிடுகிறீர்களா? உப்பை குறைக்க சில எளிய வழிகள் இதோ! - EXCESS SALT INTAKE

உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை கைவிட சில சிம்பிள் டிப்ஸ் இதோ உங்களுக்காக...

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Feb 1, 2025, 5:28 PM IST

மனிதன் நாள் ஒன்றுக்கு 1500 மி.கி அளவுக்கும் குறைவாக உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என பல ஆரோய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது. ஆனால், நம்மில் பலர் 3000 மி.கி அளவுக்கு மேல் உப்பு உட்கொள்வதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தேவைக்கு அதிகமான உப்பு பிபி, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுத்தும் என 2017ல் The American College of Cardiology இதழில் வெளியான "The effects of sodium reduction on blood pressure in individuals with hypertension" ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அந்த வகையில், உப்பு அதிகம் எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை எப்படி கைவிடுவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..

  • கொய்யா பழம், மாங்காய், சோளம் போன்றவற்றில் உப்பு, மிளகாய் தூள் தூவி சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது? இவை உண்பதற்கு சுவையாக இருந்தாலும், ஆரோக்கியத்திற்கு கேடுகளை விளைவிக்கும். இந்த பழக்கத்தை மாற்ற முடியாதவர்கள், ஆம்சூர் பொடி (மாங்காய் தூள்), மிளகுத் தூள், ஆர்கனோ, ஓமம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • உப்பு அதிகமாக உள்ள உணவுப் பொருட்களான சாஸ் வகைகள் மற்றும் ஊறுகாய்களை தவிர்ப்பது நல்லது. இதனை அடிக்கடி உட்கொள்வதால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து உடலில் பல தீங்குகளை ஏற்படுத்தும். எனவே, அத்தகைய உணவுப் பொருட்களை அடிக்கடி உட்கொள்வதை குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • தயிர், சாலட், பழங்களில் உப்பு சேர்த்து சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவது நல்லது.
  • உப்பு அதிகம் உட்கொள்வதால் உடலில் நீர்கோர்க்கும். இதன் விளைவாக, முகம், வயிறு மற்றும் உடலின் பிற பாகங்கள் வீங்குவதுடன் வலியை ஏற்படுத்தும். அதன்படி, உப்பின் அளவை படிப்படியாகக் குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • நம்மில் பெரும்பாலனோர், எப்போது சாப்பிட்டாலும் உப்பு டப்பாவை அருகில் வைத்துக்கொள்வார்கள். உணவில் உப்பின் அளவு சரியாக இருந்தாலும், உணவு மீது லேசாக உப்பு தூவி, தூக்கலாக சாப்பிடவில்லை என்றால் பலருக்கும் உணவு உள்ளே இறங்காது. உப்பு நுகர்வை குறைக்க வேண்டும் என்பவர்கள் முதலில் இந்த பழக்கத்தை கைவிடுங்கள்.
  • நீங்கள் ஏற்கனவே பிபி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு உட்கொள்ள வேண்டும் என்று உங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவர்கள் உங்கள் உடல்நிலையை சரிபார்த்து, நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய அளவை பரிந்துரைப்பார்கள்.

இதையும் படிங்க: உடலில் நீர்ச்சத்து குறைபாடு? வாரத்திற்கு 2 முறை இந்த காய்கறி சாப்பிடுங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.