அனைவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், குறிப்பாக நீரிழிவு மற்றும் ப்ரீடயாபெட்டிக்ஸ் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது அவசியம். உலகளவில் 800 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO கூறுகிறது.
இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உணவுமுறை மற்றும் மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், குறிப்பிட்ட நேரங்களில் உடற்பயிற்சி செய்வது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சரி, உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த எப்போது உடற்பயிற்சி செய்ய வேண்டும்? நீங்கள் என்ன வகையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஏன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்?:உடற்பயிற்சி இன்சுலினை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. மேலும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்தால், அனைத்து நன்மைகளையும் சேர்த்துப் பெற முடியும் என்றால் நம்ப முடியுமா? 2023 ஆம் ஆண்டு NCBI வெளியிட்ட ஒரு ஆய்வில், சரியான நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளது.
உடற்பயிற்சி செய்ய சரியான நேரம்?: உணவருந்திய பின் குறிப்பாக காலை மற்றும் மதிய உணவுக்கு பின் உடற்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது. பொதுவாக, நாம் உணவருந்திய பின்னர், சர்க்கரை அளவு அதிகரிக்கும். அந்த வகையில், உணவுக்கு பின் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, இரத்தத்தில் கலக்கும் குளூக்கோஸஸை தசைகள் உறிஞ்சுகின்றன.
2023ல் NCBI நடத்திய ஆய்வில், உணவுக்குப் பிறகு 15 நிமிட நடைப்பயிற்சி அல்லது லேசான உடற்பயிற்சி செய்வது, உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உணவுக்கு முன் காலையில் உடற்பயிற்சி செய்வதும் காலப்போக்கில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என குறிப்பிட்டுள்ளது.
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சிறந்த பயிற்சிகள்:
கடுமையான உடற்பயிற்சி செய்வது மட்டும் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதல்ல. ஒரு சில எளிய மற்றும் நிலையான செயல்கள் மூலம், உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.