சென்னை:கேமரூன் நாட்டைச் சேர்ந்த 54 வயதான சர்வதேச கால்பந்தாட்ட வீரரும் மற்றும் கொலம்பே ஸ்போர்ட்டிவ் டு டிஜா எட் லோபோ(Colombe Sportive) கால்பந்தாட்ட குழுவின் தற்போதைய மேலாளருமான ரிச்சர்ட் டோவா என்பவருக்கு முழுமையான முழங்கால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழுமத்தின் ஒரு அங்கமான எம்ஜிஎம் மலர் அடையாறு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இவர், கேரளா ஃபுட்பால் கிளப்-ன் முன்னாள் பயிற்சியாளராகவும் இந்தியாவில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிச்சர்ட் டோவா கடந்த ஆறு மாதங்களுக்கும் அதிகமாக சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு கடுமையான முழங்கால் வலி காரணத்தால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகை புரிந்தார். தினசரி பணிகளைச் செய்வதிலும் பிரச்சனைகளை எதிர்கொண்ட டோவா உருக்குலைவு பிரச்சனையும் எதிர்கொண்டுள்ளார்.
இவருக்கு செய்யப்பட்ட எக்ஸ்-ரே சோதனைகளும், மருத்துவ மதிப்பீடுகளும், மூட்டு சீரழிவு முதிர்ச்சியடைந்த நிலையிலிருப்பதை வெளிப்படுத்திய நிலையில், உடனடியாக அறுவைசிகிச்சை செய்வதை மருத்துவமனை பரிந்துரைத்துள்ளது. மேலும், டோவோவின் வலது முழங்கால் மூட்டில் கிரேடு IV எலும்புப்புரை நோயின் கடுமையான பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டது.
சிகிச்சை முறை: இதைத்தொடர்ந்து, நவம்பர் 7-ம் தேதியன்று எம்ஜிஎம் மலர் அடையார் மருத்துவமனையின் எலும்பியல் துறையின் குழு வலது முழங்கால் மாற்று அறுவைசிகிச்சையை இவருக்கு வெற்றிகரமாக செய்தது. இது குறித்து, டாக்டர். நந்தகுமார் சுந்தரம், “ACL, MCL, தசைக் குருத்தெலும்பு கிழிசல்கள் போன்ற முழங்கால் காயங்கள் கால்பந்தாட்டத்தில் பொதுவாக ஏற்படுவதால் திறம்பட செயல்படும் முன்தடுப்பு உத்திகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது அவசியம்.
ஓடுவது, குதிப்பது, எத்துவது மற்றும் மிக வேகமாக திசையில் மாற்றங்கள் போன்றவற்றை சார்ந்திருக்கக்கூடிய விளையாட்டாக கால்பந்து இருக்கிறது. விளையாட்டின்போது நடைபெறுகிற இந்த செயல்பாடுகள் அனைத்தும், முழங்கால் மூட்டு மீது கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இந்த அழுத்தத்தோடு, விளையாட்டின் அதிக தீவிரத்தன்மையும் இணைகிறபோது சிறிய காயங்கள் மட்டுமன்றி ஒரு விளையாட்டு வீரரின் விளையாட்டு ஆயுளையே பாதிக்கக்கூடிய கடுமையான காயங்கள் ஏற்படக்கூடும்” என்று கூறினார்.
நம்பிக்கையிழப்பு குறித்து டோவா: வீரர் ரிச்சர்ட் டோவா பேசுகையில், “எனது வலது முழங்காலில் நான் எதிர்கொண்ட பிரச்சனையும், கடுமை மற்றும் தீவிரத்தன்மையின் காரணமாக ஒரு பயிற்சியாளராக எனது பணிக்கு மீண்டும் என்னால் திரும்ப முடியுமென்று நான் ஒருபோதும் கருதவில்லை. எனது உற்சாகமான உணர்வுகளை குறைத்து நம்பிக்கையிழப்பு எனக்கு ஏற்படத் தொடங்கியது.