தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை தாக்கிய வயிற்றுப் புற்றுநோய்.. தடுப்பது எப்படி? - வயிற்றுப்புற்றுநோயை தடுப்பது எப்படி

Stomach Cancer: ஆண்களை அதிகமாக தாக்கும் வயிற்றுப் புற்றுநோய் பற்றியும், அதை எப்படி தடுப்பது என்பது குறித்தும் இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 2:29 PM IST

சென்னை:தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்திய போது தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட போதே தனக்கு உடல் நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், இருப்பினும், அந்த நேரத்தில் அதைப் பற்றிய தெளிவான புரிதல் தனக்கு இல்லை என்றும் கூறினார்.

இஸ்ரோ தலைவருக்கு வயிற்றுப் புற்றுநோய்: புற்றுநோய் கண்டறியப்பட்டதை அடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் அடுத்து 5 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சையும் எடுத்துக் கொண்டதாகவும் கூறினார். இது குறித்து மேலும் பேசிய அவர், புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது தனது குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஆனால் தப்போது, புற்றுநோயையும் அதன் சிகிச்சையையும் ஒரு தீர்வாக உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

புற்றுநோய்க்கு எதிரான தான் போராடிய விதம் குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், 4 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் 5வது நாள் மீண்டும் பணியில் இணைந்ததாக கூறினார். தற்போது புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்ததாகவும், தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

வயிற்றுப் புற்றுநோய்:இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை தாக்கிய வயிற்று புற்றுநோய் குறித்து நிபுணர்கள் கூறுவதை இத்தொகுப்பில் பார்க்கலாம். இது குறித்து குருகிராமில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் இயக்குநர் மருத்துவர் வினய் சாமுவேல் கெய்க்வாட் கூறுகையில், “வயிற்றுப் புற்றுநோய் பெண்களை விட ஆண்களையே அதிகமாக தாக்கும். ஆண்களிடையே அதிகமாகக் காணப்படும் 5வது புற்றுநோய்.

அறிகுறிகள்:வயிற்றுப் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் என்று பார்த்தோமானால், தொடர்ந்து வயிற்று வலி, வயிறு பகுதியில் அசௌகரியம், அதிகமான எடை இழப்பு, பசியின்மை, உணவு விழுங்குவதில் சிரமம், குமட்டல், வாந்தி, மலத்தில் இரத்தம் போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகள் தெளிவற்றதாக இருக்கலாம். சில சமயங்களில் இரத்த சோகை, வயிற்று வலி, எடையிழப்பு போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.

வயிற்று புற்றுநோயின் கட்டத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். வயிற்றுப் புற்றுநோய்களில் அடினோகார்சினோமா, லிம்போமா மற்றும் இரைப்பை, குடல் கட்டிகள் உள்ளிட்ட வகைகள் உள்ளன. வயிற்று புற்றுநோய் அதிக இறப்பு விகிதங்களை உருவாக்கிறது. வயிறு என்பது நாம் உண்ணும் உணவைச் சேமித்து, செரிமானத்திற்கு உதவும் உறுப்பு என்பதால், உணவு அளவைப் பொறுத்து மிகவும் விரிவடையும் தன்மை கொண்டது. ஆகவே வயிற்றில் புற்றுநோய் கட்டிகள் இருப்பதை நோயாளிகள் கண்டறிவது சற்று கடினமே” என்று கூறினார்.

ஆபத்து காரணிகள்:ஹெலிகோபாக்டர் பைலோரி தொற்று அதாவது அல்சர், புகைப்பழக்கம், மது அருந்துதல், காரமான உணவு உட்கொள்ளல், போன்றவை வயிற்றுப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இது மட்டுமில்லாமல் மரபணு ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆண்களுக்கே பாதிப்பு அதிகம்:அமிர்தா மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் புனீத் தார் கூறுகையில், “பொதுவாக வயிற்றுப் புற்றுநோயானது 50 வயதிற்குப் பிறகு ஏற்படுகிறது. சராசரியாக 60 வயதிற்குள் கண்டறியப்படுகிறது. பெண்களுடன் ஒப்பிடுகையின் ஆண்களுக்கு வயிற்று புற்றுநோய் பாதிப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

மது அருந்துதல், புகை பிடித்தல் உள்ளிட்ட காரணங்களால் ஆண்கள் இந்த பாதிப்பை அதிகமாகவே எதிர்கொள்கின்றனர். வயிற்றுப் புற்றுநோயால் ஏற்படும் கட்டிகள் வேகமாக வளர்ந்து, உடலின் மற்ற பகுதிகளுக்கு விரைவாக பரவும்” என்று கூறினார்.

வயிற்றுப் புற்றுநோயை தடுப்பது எப்படி:வயிற்றுப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க ப்ரஷான பழங்கள், காய்கறிகள் நிறைந்த சமச்சீரான உணவை உட்கொள்வது நல்லது. பாதுகாக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். குறிப்பாக புகைப்பிடிப்பதை நிறுத்தி, மது அருந்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:உலக பதின்பருவ மனநல தினம்: பெற்றோர் கவனிக்க வேண்டியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details