நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால்,நெய், எண்ணெய்,தண்ணீர், மசாலா பொருட்கள் என சந்தையில் கிடைக்கும் அனைத்து உணவுப் பொருட்களிலும் கலப்படம் செய்யப்படுவது தற்போது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. உணவுக் கலப்படத்தைச் சுற்றியுள்ள செய்திகளும் மக்களை கவலையடையச் செய்துள்ளது.
அந்த வகையில், உணவில் உள்ள கலப்படங்களைக் கண்டறிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சில குறிப்புகளை வெளியிடுகிறது. இந்நிலையில், நாம் அன்றாடம் உட்கொள்ளும் கோதுமை மாவில் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அதை எப்படி கண்டுப்பிடிப்பது? எனபதை இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்து பயன்பெறுவோம்.
செய்முறை 1:
கோதுமை மாவின் தூய்மையை கண்டறிய, முதலில், ஒரு கிளாஸ் தண்ணீரில் கோதுமை மாவை ஒரு டீஸ்பூன் சேர்க்கவும். கோதுமை மாவு தூய்மையானதாக இருந்தால், சிறியளவிலான தவிடு மட்டுமே தண்ணீரின் மேற்பகுதியில் மிதக்கும். இதே, கலப்படம் செய்யப்பட்ட மாவாக இருந்தால், தண்ணீரின் மேற்பகுதியில் அதிக தவிடு மிதக்கும் என கூறப்பட்டுள்ளது.
செய்முறை 2: எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி கூட மாவின் தரத்தை சரிபார்க்கலாம் என்கின்றனர். அதற்கு, ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை சேர்த்து அதில், எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட வேண்டும். இந்த செய்முறையின் போது, மாவில் குமிழ்கள் ஏற்பட்டால் மாவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என அர்த்தம். சுத்தமான மாவாக இருந்தால் இந்த அறிகுறிகள் தென்படாது.