ETV Bharat / health

நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகும் வாழைப்பூ..ஆய்வு சொல்வது என்ன? - BANANA FLOWER BENEFITS

நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு இரண்டு முறை உணவில் வாழைப்பூ சேர்த்துக்கொள்வதால், இரத்ததில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 1, 2025, 11:53 AM IST

நீரிழிவு என்பது ஒரு தீவிரமான மற்றும் குணப்படுத்த முடியாத நோய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த நோயை முறையான உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, ஆன்டிஆக்ஸிடன்ட்களை உட்கொள்வது போன்ற எளிய முறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இயற்கையான பல உணவுகள் ஆயுர்வேதம் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அதில் குறிப்பாக, மரத்தின் தண்டு முதல் பழம் வரை பல நன்மைகளை தரும் வாழை மரத்தின் பூவில் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் கூறுகள் இருப்பதாக அய்வுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், நீரிழிவு நோய்க்கு வாழைப்பூ என்ன நன்மைகளை தரும் என்பதையும், அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

2011ல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு எடை அதிகமுள்ள எலிகள் மற்றும் இரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவுகள் அதிகமாக இருக்கும் எலிகளுக்கு வாழைப்பூ கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், எலிகள் வாழைப்பூவை உண்டு வர, இரத்த சர்க்கரை அளவு கணிசமாகக் குறைவதாக ஆய்வின் இறுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

இதே போல, வாழைப்பூவை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் உடலில் ஒரு குறிப்பிட்ட வகை புரதத்தின் உற்பத்தியைக் குறைக்கிறது என தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தால் 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

'வாழைப்பூ மற்றும் வாழை தண்டு ஆகியவை நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக இந்த கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், இவற்றை உட்கொள்வதால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை தருவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டும், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன எனவும் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் உயர் உள்ளடக்கமும் நல்லளவில் உள்ளது. அதனால்தான் வாழைப்பூ நோய் மேலாண்மைக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

வாழைப்பூவின் மற்ற நன்மைகள்:

  1. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளான வெள்ளைப்படுதல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது
  2. மலட்டுதன்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், உணவில் அடிக்கடி வாழைப்பூவை சேர்த்துக்கொள்ள வேண்டும்
  3. வாழைப்பூவில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தத்தை எதிர்த்து, பதட்டம், பயம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட செய்கிறது.
  4. இரத்த அழுத்தம், இரத்த சோகை, மூலம் , வயிற்று புண் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைப்பூ சிறந்த தீர்வு.
  5. சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி 1, சி, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங்க், கால்சியம், இரும்புச்சத்துக்களால் வாழைப்பூ நிறைந்துள்ளது.

எப்படி எடுத்துக்கொள்வது?: பூவில் உள்ள நரம்பை நீக்கி, வேகவைத்து சாப்பிடலாம். அதே போல, அவித்தோ, பொரியல் அல்லது பருப்பு சேர்த்து கூட்டு செய்தும் சாப்பிடலாம். வாரத்திற்கு இருமுறை வாழைப்பூ எடுத்துக்கொள்ளும் போது அனைத்து நன்மைகளையும் பெறலாம்.

இதையும் படிங்க:

ஆயுளை அதிகரிக்கும் 7 பழங்கள்..தினசரி உணவில் கட்டாயம் சேருங்கள்!

இரும்புச்சத்து அதிகரிக்க வாரத்திற்கு 2 முறை இந்த காய் சாப்பிடுங்க..பலன்கள் ஏராளம்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.