ETV Bharat / state

அண்ணா பல்கலை விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட முயன்ற சௌமியா அன்புமணி கைது! - SOWMIYA ANBUMANI

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமக சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டார்.

சௌமியா அன்புமணி கைது
சௌமியா அன்புமணி கைது (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 1:59 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பாமக மகளிர் அணி சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு முன்னதாக காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும், வள்ளுவர் கோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று போராட்டத்தில் கலந்து கொள்ள முயன்ற சௌமியா அன்புமணி மற்றும் பாமகவினரை காவல் துறையினர் மறித்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரையும், பாமகவினரையும் சேர்த்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது செளமியா அன்புமணி செய்தியாளர்களை பார்த்து பேசுகையில், "தமிழகத்தில் பெண்கள், கல்லூரி மாணவிகள், சிறு குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் தான் நிலவுகிறது. பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என போராட்டம் நடத்த முயற்சி செய்தாலும் அவர்களை கைது செய்வது தான் இங்கு வாடிக்கையாகி வருகிறது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு: பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல்!

இன்னும் எத்தனை பெண்களை இந்த திமுக அரசு காவு வாங்க காத்திருக்கிறது. குற்றவாளிகளை கைது செய்ய தவறவிட்ட இந்த காவல்துறை, போராட்டம் நடத்த முன் வருபவர்களை மட்டும் ஏன் கைது செய்ய இவ்வளவு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பேசாமல் வேறு எதற்காக பேசுவார்கள். குற்றவாளிகளை இந்த அரசு கைது செய்து அவர்களுக்கு சிறையில் சலுகைகளை தான் வழங்கி வருகிறது. குற்றவாளிக்கு உடனடியாக தகுந்த தண்டனையை வழங்க வேண்டும்.

இது போன்று சம்பவத்தில் ஈடுபடும் மிருகங்களை சும்மா விடக்கூடாது. கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு மூன்று மாதத்திற்குள் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.

முன்னதாக, அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கல்லூரி மாணவிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை ஆகினர். அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசியல் கட்சிகள் கையிலெடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் இவ்விவகாரம் பூதாகரமாகி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.