தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி பயன்பாட்டிற்கு எப்போது வரும்? உண்மையில் புற்றுநோயை தடுக்குமா? மூத்த மருத்துவர் விளக்கம்! - CANCER VACCINE

பெண்களின் கருப்பை வாய் பகுதியில் வரும் புற்றுநோயை தடுக்க முடியும் எனவும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் 15 வகையான புற்றுநோய்கள் வரும் அபாயம் உள்ளது என மூத்த மருத்துவர் எம் ஏ ராஜா தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

By ETV Bharat Health Team

Published : 15 hours ago

சென்னை:புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில், "புற்றுநோய்க்கான தடுப்பூசி ஏற்கனவே புற்றுநோய் வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாறுதலாக உள்ள தடுப்பு அணுகுமுறை" என தெரிவித்துள்ளார் எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் மூத்த ஆலோசகரும், இயக்குனருமான எம்.ஏ.ராஜா.

புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குனர் தெரிவித்த நிலையில், இந்த தடுப்பூசி எப்போது பயன்பாட்டிற்கு வரும்? அதன் செயல்பாடுகள் என்ன? போன்ற கேள்விகளுக்கு மருத்துவர் எம்.ஏ.ராஜா விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் கூறுகையில், "ரஷ்யாவில் புதியதாக புற்றுநோய் தடுப்பு மருந்து வந்துள்ளது. சமீபகாலங்களில் புற்று நோய் தடுப்பதற்கான அணுகுமுறைகள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. தடுப்பூசி என கூறினால் ஒரு நோயை தடுப்பதற்கு என்று தான் அனைவரும் புரிந்துக் கொள்வார்கள்.

தடுப்பு அணுகுமுறை: ஆனால் புற்றுநோயை பொருத்தவரையில் இது போன்ற தடுப்பூசிகள் தடுப்பதற்கு அல்ல. ஏற்கனவே புற்றுநோய் வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாறுதலாக உள்ள தடுப்பு அணுகுமுறை. ஒருவருக்கு நோய் தடுப்பு சக்தி குறைவாக இருப்பதாலோ, சரியாக பணிபுரியாமல் இருப்பதாலோ தான் புற்றுநோய் வளர்வதற்கு சந்தர்பங்கள் அதிகரிக்கின்றன.

புகைப்பிடிப்பவர்கள் எல்லோருக்கும் புற்றுநோய் வருவதில்லை, மாசடைந்த காற்றை சுவாசிக்கும் எல்லோருக்கும் புற்றுநாேய் வருவதில்லை. நமது உடலில் பல தடுப்பு சக்திகள் உள்ளது. புற்றுநோய் தடுப்பதற்கு டென்ட்ரிடிக் செல்கள் (D cell) என்ற பகுதி நமது உடலில் புற்றுநோய் உருவாகிறதா என்பதை கண்காணித்து அழித்து விடும். டென்ட்ரிடிக் செல்கள் சரியாக பணிபுரியாவிட்டால் புற்று நோய் உருவாகும்" என்றார்.

செயல்பாடு என்ன?: அதனை தொடர்ந்து பேசியவர், "ஏற்கனவே புற்றுநோய் உள்ளவர்களிடம் இருந்து அணுக்களை எடுத்து அதனை பரிசோதனை கூடத்தில் தடுப்பு சக்தியை அதிகரித்து அதனையே அந்த நோயாளிகளுக்கு மறுபடியும் கொடுக்கும் முறையாகும். அதன் மூலம் வீரியம் அதிகாித்து புற்றுநோயை அழிக்கும். அதனதை் தான் தடுப்பூசி என கூறுகின்றனர்.

மூத்த மருத்துவர் எம் ஏ ராஜா (Credit - ETV Bharat Tamil Nadu)

ரஷ்யாவில் அறிவித்திருக்கும் எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசி என கூறுகின்றனர். மனித உடலில் உள்ள அணுவில் நியூக்ளியஸ், சைட்டோபிளாசம் உள்ளது. நியூக்ளியஸ் மரப்பணுக்களை சரிபார்க்கும் டிஎன்ஏ அமைப்பு இருக்கிறது. டிஎன்ஏவில் இருந்து தான் குறிப்பிட்ட புரதங்களை உருவாக்கும் ஆர்என்ஏ என்ற வேறு புரதம் இருக்கிறது.

அது டிஎன்ஏவில் இருந்து குறிப்பிட்ட சில புரதங்களை எடுத்து ஆர்என்ஏ உருவாக்கும். அது தான் உடலில் புற்றுநோயை உருவாக்கும். புற்றுநோய் எடுத்துக் கொண்டு செல்லும் ஆர்என்ஏ தான் எம்ஆர்என்ஏ கூறுகிறோம். சமீபத்தில் கரோனா தடு்பபதற்கும் தடுப்பூசி தயார் செய்யப்பட்டது. அதேபோல் தான் இந்த தடுப்பூசியையும் தயாரித்து உள்ளனர்" என்றார்.

பயன்பாட்டிற்கு எப்போது வரும்?: "தடுப்பூசியை நோயாளிக்கு செலுத்தி பரிசோதனை செய்யவில்லை. பரிசோதனைக் கூடத்திலோ அல்லது விலங்கிற்காே கொடுத்திருக்கலாம். அது குறித்த தகவல் இல்லை. முதலில் நோயாளிக்கு எந்த டோஸ் கொடுத்தால் ஆபத்தை விளைவிக்காது என்பதை கூறுவர். அதனைத் தொடர்ந்து புற்றுநோய் வந்தவர்களுக்கு கொடுத்துப் பார்பார்கள்" எனக் கூறிய மருத்துவர், "அதனைத் தொடர்ந்து சிகிச்சை மற்றும் தடுப்பூசி கொடுத்தும் பரிசோதனை செய்வார்கள்.

தற்பொழுது கூறியுள்ள தகவலின் படி மருந்து பயன்பாட்டிற்கு வருவதற்கு 2 ஆண்டிற்கு மேல் ஆகும். அதற்குள் வேறு மருந்துகளும் வரும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். ஆனால், பல புற்றுநோய்களுக்கு 100 சதவீதம் தடுக்கும் முறைகள் இல்லை" என்றார்.

கோப்புப்படம் (Credit - ETV Bharat)

கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கலாம்:மேலும், "பெண்களின் கருப்பை வாய் பகுதியில் வரும் புற்றுநோய் முழுவதும் தடுக்க முடியும். பாப்பிலோமா வைரஸ் மாற்றம் ஏற்பட்டப் பின்னர் தான் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான தடுப்பூசியை 9 முதல் 26 வயது வரையில் உள்ள பெண்கள் போட்டுக் கொள்ளலாம். அப்படி போடும் போது கருப்பை வாய் பகுதியில் புற்றுநோய் 95 சதவீதம் வராமல் தடுக்கலாம்.

இது குறித்து மக்கள் அறியாமல் இருப்பதால் போட்டுக் கொள்வதில்லை அரசு மருத்துவமனையிலும் கிடைக்கிறது.
ஹெபடைடிஸ் பி வைரஸ் மூலம் உருவாகும் கல்லீரல் புற்றுநோய் தடுப்பதற்கான தடுப்பூசியும் இருக்கிறது. இதனையும் செலுத்திக் கொள்ளலாம். இதனை போட்டுக் கொண்டாலும் கல்லீரல் புற்றுநோய் 10 ஆண்டிற்கு வராது. இதனை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும்.

புகைப்பிடிப்பதால் புற்றுநோய்: பல புற்றுநோய்கள் வரக்கூடிய சூழ்நிலையை தவிர்க்கலாம். புகைப்பிடிப்பது, புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் 15 வகையான புற்றுநோய்கள் வரும் அபாயம் உள்ளது . இதனை தவிர்த்தால் புற்றுநாேய் வருவதை தவிர்க்கலாம். மதுபானம் அருந்துவதால் வாய் முதல் ஆசனவாய் வரையில் உள்ள உணவுக்குழாய், தொண்டை, கல்லீரல் போன்ற இடங்களில் புற்றுநோய் வரும்.

சரியாக உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் வருகிறது. தினமும் வெளியில் உணவு உட்கொள்ளும் போது அதில் ரூசிக்காக காெழுப்பு சத்து, நிறங்கள், மணங்களை அதிகமாக சேர்ப்பதை சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.

என்ன செய்வது?:

  • கொழுப்பு சத்து அதிகமாக உள்ள பொறிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்
  • சிவப்பு நிறத்தில் உள்ள உணவுகள் தினமும் உட்கொள்ளலாம் தவிர்க்க வேண்டும்
  • காய்கறிகள் , பழங்களை தினமும் அதிகளவில் உண்ண வேண்டும்.
  • உடல் எடையை சாியாக வைத்தக் கொள்ள வேண்டும்.
  • உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உடலில் பாதிப்பா? மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் சொன்ன முக்கிய தகவல்!

ABOUT THE AUTHOR

...view details