ETV Bharat / health

மாதவிடாய் முதல் நீரிழிவு வரை..வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! - CINNAMON WATER BENEFITS

தினமும் ஒரு கிளாஸ் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)
author img

By ETV Bharat Health Team

Published : Dec 16, 2024, 4:54 PM IST

பிசிஓஎஸ்: ஹார்மோன் சமநிலையின்மையால் பெண்கள் மத்தியில் ஏற்படும் பிசிஓஎஸ் (PCOS) உடல் பருமன், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. 100ல் 30 பெண்களுக்கு மேல் பிசிஓஎஸ் பிரச்சனையினால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. இந்நிலையில், பிசிஓஎஸ் அறிகுறிகளை குறைக்கவும், ஹார்மோனை சமநிலையாக்க இலவங்கப்பட்டை தண்ணீர் உதவியாக இருக்கிறது.

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது: கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், டைப் 2 நீரிழிவு நோயளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயாளிகள் காலை மற்றும் மாலையில் இலவங்கப்பட்டை தேநீரை குடிப்பதன் மூலம் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். டீ, காப்பிக்கு பதிலாக இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)

மாதவிடாய் வலி: சீரற்ற மாதவிடாய் பிரச்சனையினால் அவதிப்படும் பெண்கள், தினசரி காலை வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீரை குடித்து வந்தால் ஹார்மோன் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சீராகி, கருப்பையில் உள்ள கழிவுகள் வெளியேறும். அதுமட்டுமல்லாமல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

செரிமான பிரச்சனைகள் நீங்கும்: செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று உப்புசம் போன்றவையை நீக்கி லேசான உணர்வைக் கொடுக்கும். மேலும், குடல் இயக்கத்தை மேம்படுத்தி குடலில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியெற்றி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

இது தவிர, செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும், பல்வலி ஈறு போன்ற பிரச்சனைகளுக்கும் இலவங்கப்பட்டை நிவாரணம் அளிக்கின்றது.

இலவங்கப்பட்டை தண்ணீர் செய்வது எப்படி?: இரவு தூங்குவதற்கு முன் ஒரு கப் தண்ணீரில் ஒரு துண்டு இலவங்கப்பட்டையை சேர்த்து ஊற வைத்து மறுநாள் காலையில் குடிக்கலாம். இல்லையென்றால், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, 2 கிளாஸ் தண்ணீர் மற்றும் 1 பட்டை துண்டு போட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் 1 கிளாஸ் அளவிற்கு வற்றியதும் அடுப்பை அணைத்து வெதுவெதுப்பாக எடுத்துக்கொள்ளலாம்

இதையும் படிங்க:

மழைக் காலத்திற்கு ஏற்ற உணவுகள்.. டாக்டர்கள் சொல்லும் அட்வைஸ் என்ன?

இரவில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.